பக்கம்:நாவுக்கரசர்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பாண்டி நாட்டுத் திருத்தல வழிபாடு

பாண்டி நாட்டில் உள்ள சிவத்தலங்கள் பதினான்கு. இவற்றுள் சிலவற்றைத்தான் அப்பர் பெருமான் வழி பட்டுப் போற்றியுள்ளார். இதற்குப் பாண்டிப் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த ஞான சம்பந்தப் பெருமானே காரணமாவர். திருப்பூந்துருத்தியில் இருவரும் சந்தித்து உரையாடிய பிறகு நாவுக்கரசர் பாண்டி நாட்டுத் தலங் களை வழிபடத் திருவுளம் கொள்ளுகின்றார். சம்பந்தப் பெருமானும் அப்பர் மூலம் தொண்டை நாட்டுத் தலங் களைப் பற்றிக் கேள்வியுற்றதனால் தொண்டை நாட்டுத் தலங்களை வழிபடத் திருவுளங் கொள்ளுகின்றார்.1

பாண்டி நாட்டுப் பயணம் : திருப்பூந்துருத்தி இறை வனை வணங்கி விடைபெறுகின்றார் அப்பர் பெருமான். தென்திசை நோக்கிப் புறப்பட்டுத் திருப்புத்துருக்கு?வருகின் றார். திருத்தளி நாதரை வணங்கி புரிந்தமரர் தொழு

1. சம்பந்தர் தொண்டை நாடு சென்ற விவரங்களை ! ஞானசம்பந்தர் வரலாற்றில் கண்டு மகிழலாம்.

2. புத்தூர் (திருப்பத்தூர்) : திருச்சி மானா மதுரை இருப்பூர்தி வழியிலுள்ள காரைக்குடியிலிருந்து 15 கல் தொலைவு. திண்டுக்கல், மதுரையிலிருந்தும் பேருந்துமூலம் இவ்வூருக்கு வரலாம். சிவபெருமான் திருநாமம் திருத்தளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/304&oldid=634314" இலிருந்து மீள்விக்கப்பட்டது