பக்கம்:நாவுக்கரசர்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 நாவுக்கரசர்

தேத்தும் (6.76) என்ற முதற் குறிப்பையுடைய செந்தமிழ்ப் பாமாலை புனைந்து இறைவனுக்குச் சாத்துகின்றார்.

மின்காட்டுங் கொடிமருங்குல் உமையாட் கென்றும் விருப்பவன்காண்; பொருப்புவலிச் சிலைக்கை

யோன்காண் நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி

நற்கனகக் கிழிதருமிக் கருளி னோன்காண்; பொன்காட்டக் கடிகொன்றை மருங்கே கின்ற

புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு தென்காட்டுஞ் செழும்புறவில் திருப்பத் தூரில்

திருத்தளி யான்காண்; அவனென் சிங்தை யானே.(3)

என்ற பாடல் மாலையின் மூன்றாவதாக அமைந்த நறுமலர். பதிகப் பாசுரங்களில் திரும்பத் திரும்ப வரும் காண்” என்ற சொல் பாசுரங்கட்கு ஒருவிதக் கம்பீரத்தை விளை விக்கின்றது.

திருத்தளியானிடம் விடைபெற்றுக்கொண்டு திருஆல வாய் செல்லுகின்றார் நாவுக்கரசர். முளைத்தானை

நாதர். திருக்கோயில் குன்றக்குடி அடிகளாரின் ஆட்சியின் கீழ் உள்ளது. ஆண்டுதோறும் திருக்கோயிலின் ஆதரவில் பல இலக்கிய சமய விழாக்களைக்கண்டு தமிழையும் சைவத் தையும் வளர்த்து வருகின்றார் அடிகளார்.

2. ஆலவாய் (மதுரை) : இருப்பூர்தி நிலையத்தி லிருந்து ; கல் தொலைவிலுள்ளது. நடந்தே செல்லலாம். மதுரை பாண்டி நாட்டுத் தலைநகர். தமிழ்ச் சங்கங்கள் மூன்றும் திகழ்ந்த தலம். சிவபெருமான் 64 திருவிளை யாடல்களை நிகழ்த்திய அற்புதத் திருத்தலம். அங்கையற் கண்ணியார் அவதாரம் செய்து பாண்டியன் திருமகளாக வளர்க்கப்பெற்று, சோமசுந்தரராக வந்த சிவபெரு மானைத் திருமணம் செய்துகொண்டு அரசுபுரிந்த பழம்பதி. திருஞான சம்பந்தர் அனல் வாதம் புனல் வாதம் முதலியன செய்து சமணர்களைத் திருத்திச் சைவம் பரப்பிய வெற்றித் திருநகர், அங்கையற் கண்ணியம்மையார் (மீனாட்சி)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/305&oldid=634316" இலிருந்து மீள்விக்கப்பட்டது