பக்கம்:நாவுக்கரசர்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு 263

யெல்லார்க்கும்” (6.19) என்ற முதற் குறிப்பினையுடைய செந்தமிழ்த் திருப்பதிகம் பாடி ஆலவாய் அண்ணலைப் போற்றுகின்றார். -

வாயானை மனத்தானை மனத்துள் கின்ற

கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத் தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்

சுடர்திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென் தாயானைத் தவமாய தன்மை யானைத்

தலையாய தேவாதி தேவர்க் கென்றும் சேயானைத் தென்கூடல் திருவால வாய்ச் -

சிவன்அடியே சிந்திக்கப் பெற்றேன் நானே. (8)

என்பது இப் பதிகத்தின் எட்டாம் பாசுரம். பதினொரு பாசுரங்களிலும் திருவாலவாய்ச் சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே’ என்று முடியும் பாசுரங்களைப் பாடுங் கால் உள்ளம்.உருகிக் கண்ணிர் ஆறாகப் பெருகுகின்றது. மயிர்க் கூச்செறியச் செய்கின்றது.

அடுத்து வேதியா வேத கீதா’ (4.62) என்ற திரு நேரிசைச் செந்தமிழ் மாலையால் ஆலவாய் அப்பனைப் பரவுகின்றார். இதில்,

வழுவிலா துன்னை வாழ்த்தி

வழிபடும் தொண்ட னேன்உன்

செழுமலர்ப் பாதங் காணத்

தெண்டிரை நஞ்ச முண்ட

சந்நிதி மிகுபுகழ் வாய்ந்தது. அம்மையின் சந்நிதிக்கெதிரி லுள்ள பொற்றாமரைக் குளம் சங்க காலத் தொடர் புடையது. விழாக்கள் மலிந்த திருத்தலம். இந்த நூற்றாண்டின் .ெ தா ட க் க த் தி ல் பாண்டித்துரைத் தேவர் தலைமையில் நான்காவது தமிழ்ச் சங்கம் நிறுவப் பெற்று அரிய தொண்டாற்றி வருகின்றது. மதுரை . காம ராசர் பல்கலைக் கழகம் தொடங்கப்பெற்று நன்முறையில் இயங்கி வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/306&oldid=634317" இலிருந்து மீள்விக்கப்பட்டது