பக்கம்:நாவுக்கரசர்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 நாவுக்கரசர்

குழகனே கோல வில்லி!

கூத்தனே! மாத்தா புள்ள

அழகனே ஆல வாயில்

அப்பனே அருள்செ யாயே. (7)

என்பது ஏழாவது தமிழ்மணம் கமழும் வாடா நறுமலர். இப்பதிகத்திலுள்ள எல்லாப் பாடல்களுமே உள்ளத்தை உருக்கும் தன்மையவை.

பாண்டிமா தேவியாராகிய மங்கையர்க்கரசியாரும் அவ ருடைய கணவரும் வேந்தர் பெருமானுமாகிய கின்றசீர் நெடுமாறனும், அமைச்சர் குலச்சிறையாரும் திருநாவுக் கரசரை வரவேற்று வணங்கி எல்லையிலாப் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். நாவுக்கரசர் மதுரை மாநகரில் சில நாட் கள் தங்கியிருந்து திருநேரிசை, திருத்தாண்டகம் முதலிய செந்தமிழ்ச் சொல்லாலாகிய பாமலர்களால் ஆலவாய் அவிர்சடை அண்ணலை அருச்சித்துப் போற்றுவதுடன் கைத்தொண்டும் செய்து மகிழ்ச்சியுடன் காலம் கழிக்கின் றாா.

ஒரு நாள் திருப்பூவணம் என்னும் திருத்தலத்திற்கு வரு கின்றார். திருப்பூவணத் திறைவர் தமது தெய்வத் திருக் கோலத்துடன் திருநாவுக்கரசருக்கு எதிரே தோன்றிக் காட்சி தந்தருளுகின்றார். இந்த அழகிய தெய்வக் காட்சி யைக் கண்ணுற்று மகிழ்ந்த அப்பர் பெருமான், வடிவேறு திரிசூலம்’ (6.18) என்ற முதற் குறிப்பையுடைய திருத்

8. பூவணம் (திருப்பூவணம்): வையையாற்றின் கரையி லுள்ளது. மதுரை - மானா மதுரை இருப்பூர்தி வழியில் திருப்புவனம் என்ற நிலையத்திலிருந்து ; கல் தொலைவி லுள்ளது. தமிழ்வேந்தர் மூவரும் வழிபட்ட தலம். இதற்கு வடமொழி தென்மொழி இரண்டிலும் தல புராணங்கள் உள்ளன. இத்தலத்துச் சிவபெருமான்மீது திருப்பூவணம் கந்தசாமிப் புலவர்_இயற்றிய திருப்பூவண நாதர் உலா என்னும் சிற்றிலக்கியம் சொல் நயம், பொருள் நயம் செறிந்து காணப்படுகின்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/307&oldid=634318" இலிருந்து மீள்விக்கப்பட்டது