பக்கம்:நாவுக்கரசர்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு பொதுப் பதிகங்கள் 285

கோலக் காவிற் குருமணியை

குடமூக் குறையும் விடமுனியை ஆலங் காட்டி லங்தேனை

அமரர் சென்னி யாய்மலரைப் பாலில் திகழும் பைங்கனியைப்

பராய்த்து றையெம் பசும்பொன்னைச் சூலத் தானைத் துணையிலியைத்

தோளைக் குளிரத் தொழுதேனே. (5)

என்பது ஐந்தாவது பாடல். இதில் வினைகள் நாசமாக” ஒவ்வொரு தலத்து ஈசனையும் தினைக்க: போற்றுக; விழுங்குக என வழி கூறிப் பதினோராம் பாடலில்,

சிங்தை வெள்ளப் புனலாட்டிச்

செஞ்சொல் மாலை அடிசேர்த்தி எங்தை பெருமான் என்னெம்மான்

என்பார் பாவ நாசமே.

என்று முடித்தலால் பாவநாசத் திருப்பதிகம் ஆகின்றது.

‘சிவனெனும் ஓசை’ (4.3) என்று தொடங்கும் திருப் பதிகத்தில்,

விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணும் கிலனும் திரிதரு வாயு வல்லர் செறிதீயு மல்லர்

தெளிநீரு மல்லர் தெரியில் அரிதரு கண்ணி யாளை ஒருபாக மாக அருள்கார ணத்தில் வருவார் எரியர வார மார்பர் இமையாரு மல்லர்

இமைப்பாரு மல்லர் இவரே. (2) என்பது இரண்டாம் பாடல். இது சிவநாமமே நாமம் எனப் பாடியது. இது சிவனெனும் ஓசை’ என்று முதற் குறிப் பினால் பெயர் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/328&oldid=634345" இலிருந்து மீள்விக்கப்பட்டது