பக்கம்:நாவுக்கரசர்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 - நாவுக்கரசர்

“சாம்பலைப் பூசி’ (4.110) என்ற திருவிருத்தப் பதிகத் தில், -

ஒருவரைத் தஞ்சமென் றெண்ணா

துன்பாதம் இறைஞ்சுகின்றார் அருவினைச் சுற்றம் கல்விகண்

டாய்அண்ட மேயனவும் பெருவரைக் குன்றம பிளிறப்

பிளந்துவேயத் தோளியஞ்சப் பருவரைத் தோலுரித் தாய்எம்மை

யாளும் பசுபதியே. (4)

என்பது நான்காம் பாடல். இப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாடலின் இறுதிதோறும் பசுபதியே என்று முடிவ தால் பசுபதி திருவிருத்தம்’ என்று பெயர் பெற்றது. இதில் 8,9 ஆம் பாடல்கள் காணப்பெறவில்லை.

விடையும்’ (4.111) என்ற முதற் குறிப்புடைய திரு விருத்தத்தில்,

வெண்டிரைக் கங்கை விகிர்தா என்

விண்ணப்பம் மேலிலங்கு கண்டிகை பூண்டு கடிசூத்திர

மேற்கபா லவடம் குண்டிகை கொக்கரை கோணற்பிறை

குறட்பூ தப்படை தண்டிவைத் திட்ட சரக்கரையோ என்தனி நெஞ்சமே. (9)

ஒன்பதாவது பாடல். இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலும் முதலடியில் அரனை அறைகூவி அழைத்து விண்ணப்பிக்கும் போக்கில் சிவபெருமானுக்குரிய சின்னங்களாகிய பொருள் களை வைக்கும் சரக்கறையோ தம் நெஞ்சு என்று கேட்கும் பாவனையிலிருப்பதால் இது ‘சரக்கறைத் திருவிருத்தம் என்ற திருநாமம் பெறுகின்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/329&oldid=634346" இலிருந்து மீள்விக்கப்பட்டது