பக்கம்:நாவுக்கரசர்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல்வேறு பொதுப் பதிகங்கள் 287

‘வெள்ளிக்குழைத்துளணி’ (4.112) என்ற முதற்குறிப் புடைய திருவிருத்தத்தில்,

வானம் துளங்கிலென் மண்கம்ப

மாகிலென் மால்வரையும் தானம் துளங்தித் தலைதடு மாறிலென் தண்கடலும் மீனம் படிலென் விரிசுடர்

வீழிலென் வேலைநஞ்சுண்(டு) ஊனமொன் றில்லா ஒருவனுக்

காட்பட்ட உத்தமர்க்கே. (8) என்பது எட்டாம் பாடல். ஒவ்வொரு தலத்துக்குரிய இறைவனின் திருப்பெயரையும் அவ்வத்தலத்தில் பாடு கின்ற மரபுடைய அப்பர் பெருமான் சிவன்’ என்னும் நாமத்தை போற்றிப் பாடுவதாலும் (பாடல்-9) ஐயாற் றிறைவனின் நாமம் சிவன்’ என்பதாலும் இதனை ஐயாற்றுப் பதிகமாக அடையாளம் காட்டுகின்றது என்று கூறும் பூம்புகார்ப் பேரவைக் கல்லூரிப் பதிப்பு. ஆயின் பேராசிரியர் வெள்ளைவாரணனாரும் சிவக் கவிமணியும் இதனைப் புகலூரில் பாடப் பெற்ற பொதுத் தனிப் பதிக மாகவே கொள்வர். ஒரு தலத்திற்குரிமையின்றித் தனித் தமைந்த திருப்பதிகமாகத் திகழ்வதைக் காணலாம். பவளத்தடவரை (4.113) என்று தொடங்கும் திருவிருத்தப் பதிகமும் தனித் திருவிருத்தப் பதிகமே. இந்த இருப்பதிகத் தின் பாடல்கள் அனைத்தும் பாடிப் பாடி அநுபவிக்கத் தக்கவை.

“அண்டங் கடந்த (8.97) என்று தொடங்கும் திருத் தாண்டகப் பதிகத்தில்,

கீறுடைய திருமேனி பாக முண்டோ?

நெற்றிமே லொற்றைக்கண் முற்று முண்டோ? கூறுடைய கொடுமழுவாள் கையி லுண்டோ?

கொல்புலித்தோ லுடையுண்டோ? கொண்ட வேடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/330&oldid=634348" இலிருந்து மீள்விக்கப்பட்டது