பக்கம்:நாவுக்கரசர்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செமல்கள் 293

ஆறாம் திருமுறை

திருத்தாண்டகப் பதிகங்கள் அனைத்தும் ஒரு முறை யாகத் தொகுக்கப் பெற்றது ஆறாம் திருமுறையாகும். இத்திருமுறையில் 99 திருப்பதிகங்கள் அடங்கியுள்ளன. தாண்டகம் என்பது, தொல்காப்பியச் செய்யுளியலின்படி எண்சீரான் வந்த கொச்சக ஒரு போகு எனப்படும். அடி தோறும் நான்காம் சீரும் எட்டாம் சீரும் தேமாவாக நிற்ப, மூன்றாம் சீரும் ஏழாஞ் சீரும் பெரும்பான்மை தேமாவா கவும் ஒரோவழிப் புளிமாவாகவும் அமைய இவை யொழிந்த ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் பெரும்பான்மை காய்ச்சீர்களாகவும் சிறுபான்மை மாச்சீர் விளச்சீர்களா கவும் வருதல் தாண்டகம் என்னும் பாவின் இலக்கணம். தமிழ்ச் செய்யுள் வகையாகிய தாண்டகம் என்னும் யாப்புக்கு மூல இலக்கியமாக விளங்குவன அப்பர் பெருமான் அருளிய இத் தாண்டகத் திருப்பாடல்களே. இவற்றை முதன் முதலாக அருளிச் செய்த இப்பெரும்ான் தாண்டகச் சதுரர்’, ‘தாண்டக வேந்தர் எனவும் போற்றப் பெறுவர். திருமங்கையாழ்வார் அருளிச் செய்துள்ள திருநெடுந்தாண்டகம் இங்குக் கூறிய தாண்டக யாப்பில் அமைந்த பனுவலாகும் என்பதை ஈண்டு நினைத்தல் தகும்.

அகப் பொருள் துறைகள்: அப்பர் பெருமான் இறை வனைத் தலைவனாகவும் ஆருயிராகிய தம்மைத் தலைவி யாகவும் கருதிய நிலையில் அகப் பொருள் துறையில் சில பதிகங்களை அருளியுள்ளார். இவற்றில் அடிகளார் பெற்ற சிவாதுபவம் இனிது புலனாகின்றது. இவ்வதுபவத்தை நற்றாய் கூற்றாகவும், செவிவித்தாய் கூற்றாகவும் புலப் படுத்திய பாசுரங்கள் புணர்ந்துழி உவகையும் பிரிந்துழிக் கலக்கமும்’ ஆகிய இருதிறத்தையும் விளக்குவனவாக உள்ளன. ஆருயிராகிய தலைவி ஆண்டவனாகிய தலைவ. னுடன் கொண்டிருக்கும் பிடிப்பை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/336&oldid=634354" இலிருந்து மீள்விக்கப்பட்டது