பக்கம்:நாவுக்கரசர்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.94 நாவுக்கரசர்

முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்;

மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்; பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள்;

பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்: அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்;

அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தை; தன்னை மறந்தாள் தன்காமம் கெட்டாள்;

தலைப்பட்டாள் கங்கை தலைவன் தாளே. (6.25:7)

என்ற அற்புதப் பாடலால் புலப்படுத்துவர். இப்பாடல் வரலாற்றுப் புதினம் படைப்பதில் ஈடும் எடுப்பும் அற்ற அமரர் கல்கி (இரா. கிருட்டிண மூர்த்தியின்) புதினமொன் றிலும் இடம் பெற்றுள்ளது. சங்க காலத்தில் காதலின் பெருமையைத் தலைவன்-தலைவி உறவாகக் காட்டித் தமிழர்களின் நாகரிகத்தைப் புலப்படுத்தினர் சங்கச் சான்றோர்கள். நாயன்மார்கள் ஆழ்வார்கள் காலத்தில் காதல் உணர்வு பக்தி உணர்வாகப் பரிணமித்து ஆருயிர். ஆண்டவன் உறவாக மாறி ஈறிலாப் பேரின்பத்தை விளை விப்பதாக அமைந்ததைக் கண்டு மகிழ்கின்றோம். தம்மை ஆட்கொண்ட இறைவனைச் செல்வன் என்றும் மணாளன் என்றும் மகிழ்ந்து போற்றும் பதிகங்கள் இக்கருத்தை ஒரு புடை விளக்குவனவாக உள்ளன என்று கருதுவதில் தவறில்லை. -

அருளிச் செயல்கள் கூறும் செய்தி. இச் செய்தி சமயச் சார்பாகவும், தத்துவங்களை விளக்கும் போக்கிலும், ஆரு யிர்க்கும் ஆண்டவனுக்கும் உள்ள உறவினை விளக்கும் போக்கிலும் அமைந்துள்ளது. உலகியல் பற்றிய செய்தி இவற்றுடன் கலந்து வருவதையும் கண்டு மகிழலாம்.

(1) அறவாழி அந்தணனாகிய இறைவன் பிறரது வறுமைத் துயர்கண்டு பொறாது தம்பால் உள்ள பொருள் களை இல்லை என்னாது ஈத்துவக்கும் அருளுடைச் செல்வர்கட்கென்றே திருவருட் செல்வத்தை உரிமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/337&oldid=634355" இலிருந்து மீள்விக்கப்பட்டது