பக்கம்:நாவுக்கரசர்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 - நாவுக்கரசர்

அனைவரும் இடர் நீங்கி இன்புறுதல் வேண்டும் என்பது அப்பர் பெருமானின் பெரு வேட்கையாகும். சொற்றுணை வேதியன் (4.11) என்ற பதிகத்தில் ஐந்தெழுத்தின் பெரு மையை நாவினுக் கருங்கலம் நமச்சிவாயவே'(2), நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே'(3), நடுக்கத்தைக் கெடுப் பது நமச்சிவாயவே'(4), நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே (5) என்றெல்லாம் பன்னியுரைக்கின்றார்; முத்தாய்ப்பாக, . . -

நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்(து) ஏத்தவல் லார்தமக் கிடுக்கண் இல்லையே.(10)

என்று கூறி முடிப்பர். கற்றுனைப் பூட்டி இவரைக் கடலிற் பாய்ச்சியபோது நற்றுணையாக நின்றது. இந்த அஞ் செழுத்து மந்திரந்தானே! திருக்குறுந்தொகைப் பதிகம் ஒன்றில் (5.90),

நமச்சி வாயவே ஞானமும் கல்வியும் நமச்சி வாயவே நானறி விச்சையும் நமச்சி வாயவே நாகவின் றேத்துமே நமச்சி வாயவே கன்னெறி காட்டுமே.(2)

என்று ஐந்தெழுத்து மந்திரத்தின் சிறப்பை மிகவும் தெளி வாக்குகின்றார். நல்லக விளக்கு நமச்சிவாய மந்திரம்” என்பது இவர் காட்டும் மதிவிளக்கு. சிவகதி காட்டும் விளக்கும் இதுதான். இதனால்தான்,

கருவாய்க் கிடந்துன் கழலே

கினையும் கருத்துடையேன்: உருவாய்த் தெரிந்துன்றன் நாமம்

பயின்றேன்; உனதருளால் திருவாய்ப் பொலியச் சிவாய

நமவென்று நீறணிந்தேன்; தருவாய் சிவகதிரீ, பாதிரிப்

புலியூர் அரனே. (5.90:2)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/339&oldid=634357" இலிருந்து மீள்விக்கப்பட்டது