பக்கம்:நாவுக்கரசர்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 297

என்ற திருவிருத்தத்தால் தமக்குச் சிவகதி அருளும்ாறு திருப்பாதிரிப் புலியூர்ப் பெருமானை வேண்டுகின்றார்.

(4) தொண்டர்க்குத் தொண்டராம் நற்பேற்றினை விரும்பியவர் நாவுக்கரசர் பெருமான். அடியார்க்கடியராய் வாழும் அத்திருத் தொண்டின் நிலையினைத் தவிரத் தமக்குப் பேரின்பம் தரும் பதவி பிறிதொன்றும் இல்லை என்பார். -

அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக் கும்கருத் தொன்றிலோம்; வண்டு சேர்மயி லாடு துறையரன் தொண்டர் பாதங்கள் சூடித் துதையிலே. (5.89:3)

என்ற பாடலில் இக்கருத்தினைக் கண்டு தெளியலாம். திருவாரூர்ப் பதிகம் ஒன்றில் (4.101),

பொய்யன் பிலாஅடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே. (9) என்று தம் விருப்பத்தைத் தெரிவிக்கின்றார். அடியார்க்குத் தொண்டுபட்டு, மனிதரில் தலையான அப்பெருமக்களை வாழ்த்தி வணங்கிப் போற்றுதலே மகிழ்வளிக்கும் என்ப தனைத் தெளிந்தவர் வாகீசர். ஆகவே, வானங் துளங்கிலென்? மண்கம்ப

மாகில்என்?. மால்வரையும் தானங் துளங்கித் தலைதடு

மாறிலென்? தண்கடலும் மீனம் படில்என்? விரிசுடர் -

விழிலென்? வேலைநஞ்சுண்டு) ஊனம் ஒன்றில்லா ஒருவனுக்கு

ஆட்பட்ட உத்தமர்க்கே.(4.112:8) என்ற திருவிருத்தப் பாடலால் காட்டுவர். சிவபெரு மானுக்கு ஆட்பட்ட அடியவர்கட்கு எந்த நிகழ்ச்சியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/340&oldid=634359" இலிருந்து மீள்விக்கப்பட்டது