பக்கம்:நாவுக்கரசர்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298. நாவுக்கரசர்

மனக்கலக்கம் உண்டாக்குவதில்லை என்று அவர்தம் மன. உறுதியை நிலை நாட்டுகின்றார்.

சிவனடியார்கள் சுற்றத் தொடரை அறுத்தவர்கள்; புலன்களை அகத்தடக்கி, மடவார் போகத்தை அறவே துறந்து திருமடத்தில் தங்கியிருந்து சிவபரம் பொருளை இடைவிடாது சிந்திப்பவர்கள். ஆதலின் இவர்தம் திரு வுள்ளத்தில் என்றும் இறைவன் எழுந்தருளியிருப்பான். இதனை,

மடமன்னும் அடியார்தம்

மனத்திலுள்ளார். (6.10:6)

என்ற தொடரில் காட்டுவர். திருநீறும் அக்கமணியும் பூண்டு சிவபெருமானை இடையறாது போற்றும் மெய்யடி யார்களைச் சிவபெருமானாகவே மதித்து, அன்னவர் பிறந்த குலம் முதலியவற்றைக் கருதாமல், வழிபடும் அன்பு டையார் திருவுளத்திலே காண்டற்கரிய பெருமானைக் கண்டு மகிழலாம் என்பது அப்பர் பெருமானின் திருவரு :ளநுபவமாகும். -

எவரேனும் தாமாக விலாடத் திட்ட

திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி உவராதே அவரவரைக் கண்ட போது

உகந்தடிமைத் திறகினைந்தங் குவந்து நோக்கி இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி

இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே

கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே. (6.6:13) என வரும் கன்றாப்பூர்த் திருத்தாண்டகத்தால் இந்த உண்மையைத் தெளிவாக்குதல் காணலாம். கன்றாப்பூர் நடுதறி-கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் தம் உள்ளத்தில் ஊற்றமாகப் பதிந்துள்ள இக்கருத்தினை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/341&oldid=634360" இலிருந்து மீள்விக்கப்பட்டது