பக்கம்:நாவுக்கரசர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxi

கட்கு ஊறும் தேனை என்னும் திருத்தாண்டகத்தைக் குறிப்பிடும்போது, உளங்கனிந்திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்தில் ஊறும் தேனை என்ற திருமங்கையாழ்வார் பாசுரத் தொடரினை எடுத்துக்காட்டுவது (பக். 140) இன்பம் பயப்பதாக உள்ளது. திருக்குறுந்தொகைச் செந்தமிழ் மாலையால் சேவிக்கின்றார் (பக். 192} என்று கூறியிருப்பது வைணவ மரபில் ஊறிய ஆசிரியர் தம் சொல்லாட்சிச் சிறப்பாகும்.

‘உயிராவணம் எனத் தொடங்கும் பதிகத்தில் இடம் பெற்றுள்ள முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்” என்னும் பாடலின் பொருளை விளக்கிப் பின், பாசத்தை நீக்கிப் பதியை அடையும் உயிரின் தன்மை கூறுகிறது என்று கருத்துரைக்கும் ஆசிரியர், தனியாக ஓர் அகப்பாடல் எப்படி வந்து இப்பதிகத்தில் ஏறியது என்பதை அறியக் கூடவில்லை. (பக். 15கி) என்று கூறியிருப்பது எண்ணத் தக்கது. பொதுவாக ஒரு பதிகப் பாடல்கள் அனைத்தும் ஒரு போக்குடையனவாகும். அரிதாகச் சில பதிகப் பாடல் கள் பல் போக்குடையனவாக அமைதல் உண்டு. அவ்வகை யிலமைந்த உயிராவணம் என்னும் தொடக்கப் பாடல் கொண்ட பதிகத்தின் இடையே பொருளால் வேறுபட்ட பாடல் . அகப்பாடல் - ஒன்று இடம் பெற்றுள்ளதெனக் கொள்ளுவது ஏற்புடையதாகும்.

திருமறைக் காட்டில் அப்பரும் சம்பந்தரும் ஆலயக் கதவினைத் திறக்கவும் மூடவும் பாடிய பாடற் சூழலை விளக்கும்போது, இந்த அற்புத நிகழ்ச்சி பண்டை நான் மறைகட்கும் திருநாவுக்கரசர் அருளிய தேவாரத் திருமுறை கட்கும் சிறிதும் வேற்றுமை இல்லை என்பதனைத் தெளிவாக வலியுறுத்தலைக் காண்கின்றோம் என்று கருத்துக் கூறியிருப்பது, குறிப்பிடத்தக்கது (பக். 173). அவ்வாறே அப்பரும் சம்பந்தருங் கண்ட வாய்மூர்க் காட்சி பற்றிய விளக்கமும் சிறப்பாக உள்ளது (பக். 177).

சிவபெருமானின் திருவடிப்புகழ்ச்சி இப்பதிகத்தின் தனித்தன்மையாகும்” என்று ஒரு பதிகக் கருத்துரைத்த ஆசிரியர், கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்களில், :புயவகுப்பு, திருவடி வகுப்பு போன்ற உறுப்புகளில் பாடல்கள் அமைவதற்குத் திருமுறை வித்திட்டிருக்கலாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/34&oldid=634358" இலிருந்து மீள்விக்கப்பட்டது