பக்கம்:நாவுக்கரசர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii

என்பதற்கு இப்பதிகம் நல்லதொரு சான்று’ என்று கூறியிருப்பது (பக். 200) ஏற்கத் தக்கதாகும்.

அப்பரடிகள் ஐயாற்றில் கண்ட கயிலைக் காட்சிக் கருத்தினை ஆசிரியர், கண்ணாற் காணும் உலகின் பன்மை ப்ோனிகளில் இறைவன் உடனாகி நின்ற காட்சி முதற் காட்சி ; இறைவன் காணப்படும் உலகினோடு உடனாகி நிற்பதேயில்லாமல் தனித்து வேறாகியும் நிற்பான்; இந்தக் கர்ட்சியே இரண்டர்வது காட்சி எனத் தத்துவ நிலையில் சிறப்பாக விளக்கியுள்ளார் (பக். 246).

தலைப் பதிகங்களாக அல்லாமல், பொதுப் பதிகங் களாக அமைந்துள்ள சில பதிகங்களின் சிறப்பு, பெயர்க் காரணம் போன்றவற்றை விளக்கிய ஆசிரியர், திருநாவுக்கரசர் அருளிச் செயல்கள், அப்பர் தேவார யர்ப்பமைதி, பதிகங்களின் சிறப்புகள் போன்ற செய்தி களை இறுதியில் விளக்கியுள்ளார்.

நம் காலத்தில் காந்தியடிகள் அரசியலில் ஆன் மிகத்தைக், கலந்து மேற்கொண்ட உண்ணாநோனபு, சத்தியாக்கிரகம் ஆகியவற்றின் முன்னோடியாய் விளங்கிய வராய் தயாமூலதன்மம் என்பதனை வாழ்க்கை நெறி யாகவும், தத்துவமாகவும் கண்டு காட்டிய பெருமை மிக்கவ்ராய் விளங்கிய திருநாவுக்கரசரின் வாழ்வினையும் வாக்கினையும் அழகிய வரலாறாகத் தொகுத்து வழங்கிய பேராசிரியர் டாக்டர் சுப்புரெட்டியாவர்கள் தமிழ் மக்களின் பாராட்டிற்கு உரியவராகின்றார்.

தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சை - 6.130.15 அ. மா. மரிமனம் 22 - 6 - 1986

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/35&oldid=634369" இலிருந்து மீள்விக்கப்பட்டது