பக்கம்:நாவுக்கரசர்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் - - 805

தோறும் பயின்ற சொற் பொருளமைப்பால் பெயர் பெற்றவை. கொப்பளித்த திருநேரிசை, நினைந்த திரு நேரிசை (4.74) ஆருயிர்த் திருவிருத்தம் (4.84), சரக் கறை திருவிருத்தம்.(4.111), பசுபதி திருவிருத்தம் (4.110), நின்ற திருத்தாண்டகம் (6.94), திருவடித் திருத்தாண் டகம், புக்க திருத்தாண்டகம், காப்புத் திருத்தாண்டகம், ஏழைத் திருத்தாண்டகம் போற்றித் திருத்தாண்டகம் (6.55, 56, 57) என்பனவாகும். முதற் குறிப்பாற் பெயர் பெற்றது சிவனெனும் ஓசை’ (4.8) என்ற பதிகம். ஈற்றுத் தொடரால் பெயர் பெற்றது. பாவநாசத் திருப் பதிகம் (4.15). பொருள் தொகையால் பெயர் பெற் றவை; மனத்தொகைத் திருக்குறுந்தொகை (5.96), சித்தத் தொகைத் திருக்குறுத் தொகை (5.97), உள்ளத் தொகைத் திருக்குறுந்தொகை (5.98), க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகம் (6.70) என்ற பதிகங்களாகும். பாடல்களில் பயின்ற ஈற்றுச் சொல்லால் பெயர் பெற். றவை, மறக்கிற்பனே’ (5.93), தொழிற்பாலதே. (5.94) என்னும் திருக்குறுந்தொகைப் பதிகங்களாகும். பொது வகையாற் பெற்ற பதிகங்கள்: தனித் திருநேரிசை (4.75, 6.77) தனித் திருக்குறுந்தொகை (5.89, 91), தனித் திருத் தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம் (6.93), பரவுந் தனித்தாண்டகம் (6.96) என வரும் திருப்பதிகங்களாகும்.

சம்பந்தரும், சுந்தரரும் தாம் பாடிய பதிகங்களின் இறுதிப் பாடல்களில் பாடினோராகிய தம் பெயரையும், அத்திருப்பதிகங்களைக் காதலாகி ஒதுவோர் பெறும் பயனையும் விரித்துரைத்தமைபோல, அப்பர் பெருமான் தாம் அருளிய திருப்பதிகங்களின் இறுதிப் பாடல்களில் அவற்றைக் குறிப்பிடும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. ஆனால், காலத்தைப் புறச்சமயச் சூழலில் கழித்து, இறை வனைத் தாம் மறந்திருந்த பெருங் குற்றத்தை எண்ணி உருகிய அப்பரடிகள், இங்ஙனம் காலத்தைக் கொன்னே கழித்த தம்மையும் ஒரு பொருளாகக் கொண்டு, ஆட்

நா.-20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/348&oldid=634367" இலிருந்து மீள்விக்கப்பட்டது