பக்கம்:நாவுக்கரசர்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

நாவுக்கரசர்

(இ) முசுகுந்த சக்கரவர்த்தி வழிபட்ட ஏழுவிடங்க மூர்த்தி கள் (தியாகராசத் தலங்கள்)

திருவாரூர் வீதிவிடங்கன், அஜபா நடனம் திருக்காறாயில் ஆதிவிடங்கர், குக்குட நடனம் திருக்கோளிலி அவனிவிடங்கர், உன்மத்த நடனம் திருநல்லாறு நகரவிடங்கர், உன்மத்த நடனம் திருநாகை சுந்தரவிடங்கர், பாள வார தரங்க நடனம் திருமறைக்காட்டுப் புவனவிடங்கர், ஹம்ஸ்பாத

நடனம்

திருவாய்மூர் மூலவிடங்கர், கமல நடனம்

(ஈ) பஞ்சபூதத் தலங்கள்

1.

2.

3.

4.

திருஆனைக்கா, காவிரி, கொள்ளிட்ம் ஆகிய ஆறு கட்கு இடைப்பட்ட தலம். மூலத்தானத்தில் எப் பொருளும் நீர் கசிந்து கொண்டே இருக்கும். (அப்பு-நீர்) -

திருவண்ணாமலை-அரனார் அழலுருவாய் நின்ற

தலம் (தேயு - தேஜஸ் - நெருப்பு) திருக்காளத்தி.மூலத்தானத்துள்ளிருக்கும் விளக்கு கள் எப்போதும் காற்றில் அசைந்து கொண்டே இருக்கும். (வாயு-காற்று) கோயில் (சிதம்பரம்) ஆகாயம். இதனை அறி வுறுத்துவதற்குப் பல பொன் வில்வ மாலைகள் தொங்க விடப் பெற்றுள்ளன. (திரை நீக்கித் தரி சிப்பதால் இஃது இரகசியமாகின்றது). திருஆரூர் (பிருதிவி-பூமி)..இதை இவ்வாறு கருது வதுண்டு. ஆனால் கச்சி ஏகம்பம் மணல் இலிங்க முள்ள தலமாதலால் இதையே பிருதிவித் தல மாதக் கொள்வர் பெரும்பாலோர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/359&oldid=634379" இலிருந்து மீள்விக்கப்பட்டது