பக்கம்:நாவுக்கரசர்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXXV

குறிப்பாகத் திரு. K. சுப்பாராவ், திரு. N. S. இராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் என் அன்பு கலந்த நன்றியைப் புலப் படுத்திக் கொள்கின்றேன்.

இந்த நூலைச் செவ்விய முறையில் அழகுற அச்சிட்டு உதவிய சாலை அச்சக உரிமையாளர் டாக்டர் சாலை இளந்திரையனுக்கும், எழில் கொழிக்கும் முறையில் அட்டை ஓவியம் வரைதல், அச்சுக்கட்டை தயாரித்து மூவண்ணத்தில் அச்சிடும் வரையில் பொறுப்பேற்று உதவிய ஒவிய மன்னர் திரு P. N. ஆனந்தன் அவர்கட்கும் வாமினேஷன் போட்டு உதவிய மாருதி லாமினேஷன் உரிமையாளர் திரு பார்த்திபன் அவர்கட்கும் இவ்வளவும் ஆன நிலையில் அழகிய முறையில் கட்டமைத்துக் கற்போர் கையில் கவினுறத் தவழச் செய்த நாவுக்கரசரின் பெயர் தாங்கிய திருநாவுக்கரசுக்கும் என் இதயம் கலந்த நன்றி யைப் புலப்படுத்திக் கொள்கிறேன்.

இந்த நூலுக்குச் சிறப்புப் பாயிரம் நல்கிய பேராசிரியர் க. வெள்ளை வாரணனார் (அண்ணாமலைப் பல்கலைக் கழக முன்னாள் தமிழ் ஆராய்ச்சிப் பேராசிரியர்) என் நெடு நாளைய நண்பர். கருந்திட்டைக் குடித் தமிழ்க் கல்லூரியில் பணியாற்றிய நாள்தொட்டு நன்கு அறிவேன். அடிமை நாட்டில் இராஜாஜி சென்னை மாகாணப் பிரதமராக இருந்த காலத்தில் இந்தியைப் புகுத்த முயற்சி செய்தபோது இவர் அவருக்கு மறுத்து எழுதிய காக்கை விடு தூது” இன்னும் என் நினைவில் பசுமையாகவே உள்ளது. அதன் பிறகு துறையூரில் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரிய னாகப் பணியாற்றியபோதும், காரைக்குடியில் அழகப்பர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியனாக இருந்த போதும் நல்ல பழக்கம் இருந்தது. திருப்பதி சென்ற பிறகு நெருங்கிய பழக்கம் தொடர்ந்தது. பல கருத்தரங்குகளில் பங்கு கொண்டார். தொடக்கத்திலிருந்தே தமிழில் என் வளர்ச்சியைக் கண்டவர். தமிழில் ஆழ்ந்த புலமையுடைய வர்; தனித் தன்மை வாய்ந்த ஆய்வாளர். பழகுவதற்கு இனியர்; அடக்கம் இவரது தனிச்சிறப்பு. இத்தகைய பெருமகனார் நாவுக்கரசர் என்ற இந்நூலுக்குச் சிறப்புப் பாயிர மலர் நல்கி வாழ்த்தியமைக்கு என் அன்பு கலந்த நன்றி என்றும் உரியது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/38&oldid=634387" இலிருந்து மீள்விக்கப்பட்டது