பக்கம்:நாவுக்கரசர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvi

இந்நூலுக்கு அ ணி ந் து ரை நல்கிய டாக்டர் அ. மா.பரிமணம் நான் கார்ைக்குடியில் இருந்த_நாள் தொட்டே நெருங்கிய பழக்கம் உடையவர். அப்போது அழகப்பா கல்லூரியில் தமிழ்த் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். கடுமையான உழைப பாளி. தமிழ் இலக்கியத்தை ஆராய்ச்சிக்கண் கொண்டு பயின்றவர்: ஆராய்ச்சியில் ஆழங்கால்பட்டவர். காரைக் குடியிலிருந்து பழனி பழனியாண்டவர் பண்பாட்டுக் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த போது தான் அப்பர் ப்ெருமானின் அருளிச் செயல்களை ஆய்ந்து டாக்டர் பட்டம் பெற்றவர். பின்னர்த் தஞ்சை புஷ்பம் கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றி தமிழ் எம். ஏ. கற்பித்து பல நல்ல மாணவர்களை உருவாக் கியவர். டாக்டர் பட்டத்திற்குப் பலரை வழிகாட்டி நடத்தியவர். நான் திருப்பதி சென்ற பிறகு இருவருக்கும் ஆய்வில் நெருங்கிய உறவு இருந்தது. தஞ்சையிலிருந்த போதிலும் இவரைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் தாமதமாக பயன் படுத்திக் கொண்டது வியப்பிற்குரியது. இத்தகைய நண்பர் இந்நூலுக்கு அணிந்துரை நல்கிச் சிறப்பித்தமைக்கு என் இதயம் கலந்த நன்றி என்றும் உரியது.

வைரிசெட்டிப் பாளையம் (துறையூர் வட்டம், திருச்சி மாவட்டம்) திரு எஸ். ஆர். நாகரெட்டியார் என் நெடு நாளைய நண்பர். என்ன்ை விட இரண்டு திங்கள் மூத்தவர். பிறந்த இடம் பெரிய குடும்பம்: அகவை இரண்டில் தத்துப் பிள்ளையாகப் புகுந்த இடமும் பெரிய குடும்பமே. இரண்டு குடும்பங்களும் ஒட்டிய உறவுடன் ஒன்றாகவே இருந்து வந்தன. இரண்டு குடும்பங்கட்கும் ஒரே பிள்ளையாக இருந்தமையால் சீரும் சிறப்புமாக வளர்க்கப்பெற்றார். இப்படிச் செல்வமாக வளர்க்கப்பெறுபவர்களில் பெரும் பாலோரின் வாழ்க்கை சரியாக அமைவதில்லை. ஊரிலேயே எம். சபாபதி அய்யர், கம்பெருமாள் ரெட்டியார், சுப்பிரமணிய அய்யர் இவர்கள் ஆசிரி ய ர் க ளா க அமைந்து நன்முறையில் உருவாக்கப் பெற்றார். தமிழ், தெலுங்கு, ஆங்கில மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார். வெளியூர் சென்று உயர் கல்வி பெறாமற்போனது இறைவனது திருக் குறிப்பே, ஊரில் பெற்ற தமிழ்க் கல்வியே தரமானது: பண்பாட்டை வளர்ப்பது; அதனின்றும் வழுவாழல் காப்பது. சிறுவயது முதற்கொண்டே சாதுக்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/39&oldid=634388" இலிருந்து மீள்விக்கப்பட்டது