பக்கம்:நாவுக்கரசர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvii .

கூட்டுறவும் பெரியோர்களின் தொடர்பும் இவரைச் சிறந்த மனிதராக்கின. ஒருவிதத்தில், இது ஊரின் தவப்பயனே எனலாம்.2

சிறுவயது முதற்கொண்டே நற்பழக்கமும் நற்சிந்தனை யும் கொண்டவராதலால் இறைவன் இவரைப் பொதுத் தொண்டுகளில் ஈடுபடுத்தினான். இதனால் அப்பர் பெருமான் அருகில் வர அருகதையுடையவராகின்றார். தந்தையார் சுந்தர ரெட்டியாரால் தொடங்கப் பெற்ற விவேகநந்தர் வாசக சாலையைத் திறம்பட நடத்திச் சிற் றுார் மக்களிடம் கல்வியையும் பொது அறிவையும் பெருத் கினார். இதுவே பிற்காலத்தில் இவரது அயராத் முயற்சி யால் உயர்நிலைப் பள்ளியாக வளர்ந்த மேல்நிலைப் பள்ளி யாகவும் உயர்ந்தது (நான் துறையூரில் இருந்தபொழுதும் காரைக்குடி சென்றபிறகும் இப்பள்ளியின் தோற்றத் திலும் வ ள ர் ச் சி யி லு ம் அ டி யே னு க் கு ம் சிறிது பங்கு உண்டு). திருப்பராய்த் துறை இராம கிருஷ்ணத் தபோவன முனிவர் சித்பவாநந்த அடிகளின் கூட்டுறவும் ஆசியுமே இப்பள்ளி தோன்றவும் வளரவும் முதற் காரணமாக அமைந்தன. தபோவனத்தின் நிர்வாக உறுப்பினராகவும் சில ஆண்டுகள் பணியாற்றியதால் அடி களின் ஆசியும் அருளும் இவர்மீது பாய்ந்தன.

கூட்டுறவு நிறுவன வளர்ச்சியில் இவருக்குச் சிறந்த பங்கு உண்டு. சில ஆண்டு முசிறிக் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர், துறையூர் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவர், திருச்சி கூட்டுறவு மத்திய வங்கியின் இயக்குநர், இதன் நிர்வாக இயக்குநர் பதவிகளில் தூய்மையான உள்ளத்துடன் பணியாற்றிப் பொதுமக்களின் அன்பையும், பாசத்தையும், மதிப்பையும் பெற்றவர்.

மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு . என்ற வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப இவருக்கு இல்லத் தரசியாக அமைந்த செந்தாரப்பட்டி கமலம்மாவினால், மனைமாட்சி சிறப்பாகத் திகழ்கின்றது. இறைவன் திருவுளக்

2. இவரைப்பற்றிய விவரம் கினைவுக் குமிழிகள் - (2) என்ற என் நூலில் அதிகமாகக் காணலாம், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/40&oldid=634390" இலிருந்து மீள்விக்கப்பட்டது