பக்கம்:நாவுக்கரசர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxviii

குறிப்பின்படி ஆண்மக்களில் மூத்தவர் பள்ளித் தாளாளரா கவும், இளையவர் பள்ளித் தலைமையாசிராகவும், பெண் மக்களில் ஒருவர் திருச்சி மகளிர்க் கல்லூரியொன்றில் பொருளியல் பேராசிரியையாகவும் பணியாற்றி வரும் நன் மக்கட் பேற்றையும் பெற்றுத் திகழ்கின்றார். இராமகிருஷ்ணர், விவேகாந்தர், இராமலிங்க அடிகள் இவர்களது கொள்கை களைப் பரப்பியும், உள்ளுர் அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில், அருள்மிகு வரதராசப் பெருமாள திருக் கோயில் இவற்றின் வழிவழி அறங்காவலராக இருந்து இறைப் பணியில் ஈடுபட்டும் வரும் இப்பெரியாருக்கு இந் நூலை அன்புப் படையலாக்கி மகிழ்கின்றேன். அப்பர் பெருமான் ஆசியால் இவர்தம் தொண்டுகள் மேன்மேலும் சிறந்து வளரும் என்பதற்கு ஐயம் இல்லை.

இந்நூலை யான் எழுதி வெளியிட என்னுள்ளே தோன்றாத் துணையாக, அந்தர்யாமியாக, எழுந்தருளி யிருக்கும் வேங்கடம் மேவிய விளக்கை மனம் மொழி மெய் களால் வணங்கி வாழ்த்திச் சரண் அடைகின்றேன். மற்றும் அப்பர் பெருமானின் இணையடிகளையும் முடிமீது வைத்துக் கொள்ளுகினறேன்.

அறப்பெருஞ் செல்வி பாகத்

தண்ணலஞ் செழுத்தால் அஞ்சா மறப்பெருஞ் செய்கை மாறா வஞ்சகர் ஈட்ட நீல கிறப்பெருங் கடலும் யார்க்கும் ந்ேதுதற் கரிய வேழு பிறப்பெனும் கடலும் நீத்த

பிரானடி வண்க்கம் செய்வாம்:

- பரஞ்சோதி முனிவர் வேங்கடம்’ } - AD-13 (பிளாட் 8354) அண்ணாநகர் சென்னை.600 040

! ந. சுப்புரெட்டியார் தொ.பே. 61 55 83 | J

30-6-1986

3. திருவிளையாடல் புராணம்-பாயிரம்.19,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/41&oldid=634391" இலிருந்து மீள்விக்கப்பட்டது