பக்கம்:நாவுக்கரசர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நாவுக்கரசர்

வழங்கப்பெறுகின்றது. நடு நாட்டின் ஒரு பகுதிதான் முனைப்பாடி நாடு என்றொரு கருத்தும் உண்டு. இராஜேந்திர சோழன், முதற் குலோத்துங்கன் காலக் கல்வெட்டுகளால் இந்நாடுபற்றிய குறிப்புகளை அறிய லாம். இந்நாட்டைச் சேக்கிழார் பெருமான்,

சென்னிமதி புனையவளர்

மணிமாடச் செழும்பதிகள்

மன்னிங்றைந் துளது.திரு

முனைப்பாடி வளநாடு’

என்று காட்டுவர். சிவபெருமானைச் சென்னியில் வைத்துப் போற்றும் செழுங்குடிகளையுடையது இந்நாடு. நீர் வளத் தாலும், நிலவளத்தாலும் சிறந்தது.

இத்திருநாட்டில் திருவாமூர் என்பது ஒரு சிற்றுார். இவ்வூரில் வேளாண் மரபில் குறுக்கையர் குடியில் புகழனார் என்ற பெரியார் ஒருவர் வாழ்கின்றார். இவர்தம் வாழ்க்கைத் துணைவியார் மாதினியார் என்ற திருப் பெயரினர். இவர்கள் இருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து மனையறம் நிகழ்த்தி வந்த நாளில் அவ்விரு வர்க்கும் திருமகளாகத் தோன்றியவர் திலகவதியார் என் பவர். திலகவதியார் பிறந்த சில ஆண்டுகட்குப் பின்னர் அவர்க்குத் திருத்தம்பியாராகத் தோன்றியவர் மருள் நீக்கியார் என்பார். இவர் பிறந்ததைச் சேக்கிழார் பெருமான்,

திலகவதி யார்பிறந்து

சிலமுறையாண் டகன்றதன்பின்,

அலகில்கல்ைத் துறைதழைப்ப

அருந்தவத்தோர் நெறிவாழ

3. தென்னார்க்காடு மாவட்டப்பகுதியைச் சார்ந்தது. 4. பெ. பு, திருநாவுக். 2 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/45&oldid=634395" இலிருந்து மீள்விக்கப்பட்டது