பக்கம்:நாவுக்கரசர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 5

உலகில்வரும் இருள்நீக்கி

ஒளிவிளங்கு கதிர்போற்பின் மலருமருள். நீக்கியார்

வந்தவதா ரஞ்செய்தார்” என்று சிறப்பிப்பர்.

இவரைப் பெற்று வளர்த்த பெரியோர்கள், இவர்தம் இளங்குழவிப் பருவம் கடந்த பின்னர் உரிய நாளில் பள்ளியில் அமர்த்திக் கலை பயிலச் செய்கின்றனர். பெற்றோர்கள் மகிழும் வண்ணம் செழுங்கலையின் திறங்க ளெல்லாம் நன்று பயின்று மறு ஒழிந்த இளம் பிறைபோல்’ வளர்ந்து வருகின்றார். இந்நிலையில் திலகவதியாருக்கும் பன்னிரண்டு வயது தொடங்கி நடைபெறுகின்றது. பெற்றோர்கள் இவர்தம் திருமணத்தைப்பற்றிச் சிந்திக் கின்றனர்.

இந்நிலையில், உருவும் திருவும் உயர் பேரொழுக்கமும் வாய்ந்த கலிப்பகையார் என்னும் வேளாண்குடித் தலைவர், திலகவதியாரை மணம் புரிந்துகொள்ள விரும்புகின்றார். தம் மரபுப்படி புகழனார்பால் சில ப்ெரியோர்களை மணம் பேசிவர அனுப்புகின்றார். குணமும் குலமும் ஒத்தமை கேட்டுக் கோதில் சீர்ப் புகழனார் தம் அருமைத் திருமகளார் திலகவதியாரைக் கலிப்பகையாருக்கு மணம் செய்து கொடுப்பதாக உடன்பாடு தெரிவிக்கின்றார். மணம் பேசி வரச் சென்ற பெரியோர்களும் புகழனாரின் இசைவினைக் கலிப்பகையாருக்குத் தெரிவிக்கின்றனர்.

இங்கனம் இருதிறத்தாரும் உறுதி செய்த திருமணம் நடைபெறாது போகின்றது. என் செய்வது? இறை வனின் திருவுள்ளக் குறிப்பை யார்தான் அறியவல்லார்? வடநாட்டிலுள்ள பகை மன்னரின் சேனை தமிழ் நாட்டின்

5. பெ. பு: திருநாவுக். 18 6. டிெ. டிெ. 23.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/46&oldid=634396" இலிருந்து மீள்விக்கப்பட்டது