பக்கம்:நாவுக்கரசர்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நாவுக்கரசர்

மேல் போர் குறித்துப் புறப்படுகின்றது. இந்தப் பகைவரின் படையெழுச்சியை முன்னதாகவே குறிப்பா லுணர்ந்த தமிழக வேந்தன் பேராற்றல் மிக்க கலிப்பகை யாரைத் தானைத் தலைவராக நியமித்துத் தம் படை களுடன் வடபுலத்திற்கு அனுப்புகின்றான்.

ங்ானம் வடபுலம் சென்ற கலிப்பகையார் நீண்ட நாட்கள் அங்கேயே தங்கிவிட நேரிடுகின்றது. பகைவரைப் பொருது வெல்லுந் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வினைபுரிந்து வருகின்றார்.

நெருகல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு”

என்பது வான்மறை வள்ளுவம் அன்றோ? புகழனார் நோய்வாய்ப்பட்டு இறந்து விண்ணுல கெய்துகின்றார். இந்நிலையில் அவர்தம் இன்னுயிரனைய குலக்கொடி மாதினியாருங் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல் என்ற உண்மையினை உணர்ந்து சுற்றமுடன் மக்களையும் துகளாக எண்ணி உயிர் நீத்துக் கற்புநெறி வழுவாது கணவருடனேயே சென்று விடுகின்றார். இவ்வாறு தந்தையாரையும் அன்னையாரையும் ஒரு சேர இழந்த திலகவதியாரும் மருள்நீக்கியாரும் ஆற்றொணாத் துயரில் அழுந்துகின்றனர். அறிவும் அநுபவமும் மிக்க பெரியோர்கள் உலகியல்பினை எடுத்துக் காட்டி அவர் களைத் தேற்றுகின்றனர். இதனால் ஒருவாறு இவர்கள் மனம் தெளிந்து தம் தாய் தந்தையர்க்குச்செய்ய வேண்டிய ஈமக் கடன்களைச் செவ்வனே செய்து முடிக்கின்றனர்.

திலகவதியாரின் தவ நிலை இவர்கள் நிலை இங்ஙனம் இருக்க, வட புலத்தில் போர் புரியச் சென்ற

7. குறள்.386 (நிலையாமை) 8. சிலம்பு. 2.20:80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/47&oldid=634397" இலிருந்து மீள்விக்கப்பட்டது