பக்கம்:நாவுக்கரசர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும்

கலிப்பகையார் பகைவரது போர்க் களத்தில் தம் மாவீரத் தைப் புலப்படுத்தி மாற்றாரையழித்துத் தம் உயிரைக் கொடுத்துப் புகழுடம்பை நிறுத்தி வீரர் உலகம் எய்து கின்றார். இத்துன்பச் செய்தி திலகவதியாரின் செவிக்கு எட்டுகின்றது. அவர், என் தந்தையும் அன்னையும் என்னைக் கலிப்பகையார்க்குக் கொடுப்பதாக இசைந் தனர். அந்த முறையால் நான் அவர்க்குரிய பொருளா கின்றேன். ஆதலால் இந்த உடம்பைத் துறந்து என்னுயிரை அவர் உயிரோடு இசைவிப்பேன்’ எனத் தம் உயிரைவிடத் துணிகின்றார். அப்பொழுது அவர்தம் தம்பியார் மருள் நீக்கியார் தமக்கையாரின் இணையடி களில் வீழ்ந்து புலம்புகின்றார்: அன்னையும் அத்தனும் அகன்றபின்னர் தமக்கையாராகிய உம்மை வணங்கப் பெறுதவினால் யான் இதுகாறும் உயிர் தரித்துள்ளேன். இந்நிலையில் ஒன்றும் அறியாத என்னைக் கைவிட்டுச் செல்வீராயின் யானும் உமக்கு முன்னே உயிர் துறப்பேன்’ எனக் கூறி வருந்துகின்றார்.9

தம்பியார் இவ்வாறு ஆதரிப்பாரின்றிக் கலங்கும் இடர் நிலையைக் கண்டு திலகவதியார் மிகவும் கவலையுறு கின்றார். தம் திருத் தம்பியார்-பின்னால் சைவ சமயம் தழைக்க வாழப் போகின்றவர்-இவ்வுலகில் புகழுடன் நிலைபெற்று வாழவேண்டுமெனத் தாம் கொண்ட பேரருள் தாம் உயிர் துறத்தலை விலக்கி விடுகின்றது. தம்பியின் பொருட்டு இவ்வுலகில் உயிர்தாங்கியிருப்பதாக உறுதி கொள்கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான்,

‘தம்பியார் உளராக

வேண்டும் என வைத்ததயா உம்பருல கணையவுறு

நிலைவிலக்க உயிர் தாங்கி.

9. பெ. பு. திருநாவல் 5, 33.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/48&oldid=634398" இலிருந்து மீள்விக்கப்பட்டது