பக்கம்:நாவுக்கரசர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. நாவுக்கரசர்

அம்பொன்மணி நூல்தாங்கா

தனைத்துயிர்க்கும் அருள்தாங்கி இம்பர்மனைத் தவம்புரிந்து

திலகவதியா ரிருந்தார்”

என்று காட்டுவர். பொன்னினும் மணியினுமாகிய அணிகலன்களைப் பூணாது அனைத்துயிரையும் வாழ் விக்கும் அருளையே அணிகலனாக மேற்கொண்டு மனையின்கண் இருந்தே தவப் பெருஞ் சீலராய்த் தம்பியைப் பேணி வளர்க்கின்றார் திலகவதியார்.

இங்ஙனம் இளம் பருவத்தினராகிய மருள் நீக்கியார் தாயும் தந்தையுமின்றி வருந்திய பொழுது அவர் தம்க்கையார், தம்பியார் உளராக வேண்டும்’ எனக் கொண்ட பெருங் கருணையால் அவரைத் தாய்போல் பேணி வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டமை இறைவனின் திருவருட் செயலேயாகும் என்பதை நாம் சிந்தித்தல் வேண்டும். இந்த நுட்பமான பேருண்மை யினை, மருள் நீக்கியாரே, தாம் சமணந்துறந்து சிவநெறி யினை மேற்கொண்டு நாவுக்கரசராகத் திகழ்ந்த காலத்தில் அருளிய,

எம்மை யாரிலை யானும் உளேனலேன் எம்மை யாரும் இதுசெய்ய வல்லரே அம்மை யாரெனக் கென்றென் றரட்டினேற் கம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே (5.7:6) என்னும் திருவாரூர்க் குறுந்தொகையில் தெளிவாகக் குறிப் பிட்டுள்ளதைக் கண்டு மகிழலாம். எம்மைப் பெற்ற தாயும் தந்தையும் இறந்தனர்; அவர்களின்றி யான் இவ்வுலகில் உயிரோடு உள்ளேன் அல்லேன் என்று எண்ணும் நிலையில் ஆதரவு அற்றிருந்தேன். இங்ஙனம்

10, டிெ. டிெ, - 34

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/49&oldid=634399" இலிருந்து மீள்விக்கப்பட்டது