பக்கம்:நாவுக்கரசர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 7.

யாதொரு பற்றுக்கோடும் இன்றி வருந்திய என்னை உயிர்க்குயிராகிய இறைவனையன்றி வேறு யாரும் இவ்வுயர் நிலையில் இருக்கச் செய்ய வல்லரோ? தாய் நிலையிலிருந்து எளியேனை வளர்ப்பார் யார்? என்று தம்மை நோக்கி அழுதரற்றிய என் பொருட்டு ஆரூரில் அமர்ந்தருளிய இறைவன் என்னைப் பாதுகாத்தற்குரிய அம்மையாரைத் தந்து அருள் புரிந்தார்’ என்பது இத் திருக்குறுந்தொகையின் பொருளாகும்.

இத்திருப்பாடலின் நுண் பொருளை ஆழ்ந்து காண்பது மருள் நீக்கியாரின் ஆதரவற்ற நிலையைத் தெளிவாகப் புலப்படுத்துவதாக அமையும். இளமைக் காலத்துத் தம் முடைய பெற்றோர் இறந்து போயினர் என்ற செய்தியை எம்மையாரிலை என்ற தொடர் காட்டுகின்றது. இந் நிலையில் பாதுகாப்பாரின்றித் தாம் வருந்திய நிலைமை யினை யானும் உளேன் அலேன்’ என்ற தொடர் உணர்த்து கின்றது. தம் தமக்கையாராகிய திலகவதியார் தமக்குரிய கணவர் இவர் எனப் பெற்றோரால் உறுதி செய்யப்பெற்ற கலிப்பகையார் போரில் இறந்தமை கேட்டு உயிர்விடத் துணிந்த நிலையில், என்னைப் பேணி வளர்க்கும் அன்னை யார் வேறு யாருளர்?’ என்று தாம் அழுதரற்றிய செய்தியை அம்மையார் என்று அரற்றினேற்கு என்ற தொடர் புலப்படுத்துகின்றது. இந்நிலையில் கருணையே வடிவுடைய சிவபெருமான், திலகவதியார் உயிர்துறத் தலைத் தவிர்த்து இவ்வுலகில் வாழச் செய்து, தம்மைப் பேணி வளர்க்கும் அம்மையாராகத் தம் பொருட்டுத் தந்தருளினார் என்பதை அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே என்ற தொடர் தெளிவாக்குகின்றது. அம்மையா. ராயினார் ஆரூர் ஐயரே என்று குறிப்பிடாமல் அம்மையா ரைத் தந்தார் ஆரூர் ஐயரே என்று குறிப்பிடுதலால் இறை ‘வன்ால் மருள்நீக்கியாருக்குப்ப்ாதுகாப்பாகத் தரப்பட்டவர் அம்மையார் திலகவதியார்ே என்பது நன்கு புலன்ாகின்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/50&oldid=634401" இலிருந்து மீள்விக்கப்பட்டது