பக்கம்:நாவுக்கரசர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சூலை நோயால் தடுத்தாட்கொள்ளப்பெறுதல்

‘தம்பியார் உளராக வேண்டும் என்ற பேரருளால் இல்லத்தின் கண் இருந்து மருள் நீக்கியாரை அன்புடன் போற்றி வளர்த்த தமக்கையார், திலகவதியார், தம்பி சமணர் சூழ்ச்சியில் அகப்பட்டுச் சமண் சமயத்தைச் சார்ந் தனர் என்பதைக் கேள்வியுறுகின்றார். இல்லத்தில் நல்ல சூழ்நிலையிருந்தும் புறச் சூழ்நிலையால், மருள்நீக்கியார் மனம் மாறிப் புறச் சமயத்தைத் தழுவும் நிலை வந்தமை கின்றது. இயற்கையிலேயே பாசத்தளையைக் களைந்து சுற்றத் தொடர்பும் அறவேண்டும் என்ற பெரு நோக்கத்தையுடைய திலகவதியாருக்கு அப் பற்றுறுதி இப்பொழுது தானே வந்து சேர்கின்றது. தூய சிவ நெறியைச் சாரும் நோக்கத்துடன் நாதன் திருவருளை நாடித் திருவதிகைத் திருவீரட்டானத் திருக்கோயிலை:

1. அதிகை வீரட்டானம்: (திருவதிகை) இத்தலம் பண்ணுருட்டியிலிருந்து 2 கல் த்ொலைவிலுள்ளது. சிவத் தலங்களுள் அதிகப்பட்டது (மேம்பட்டது). அதிகர், அதிகை, பழைய பல்லவ சிற்ப முறையில் கோயிலும் சிவலிங்க மூர்த்தியும் அமைந்துள்ளன. மகேந்திர வர்மப் பல்லவ மன்னன் சமண்பாழிகளை இடித்து அக்கற்களைக்

நா-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/60&oldid=634412" இலிருந்து மீள்விக்கப்பட்டது