பக்கம்:நாவுக்கரசர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 நாவுக்கரசர்

அடைகின்றார். சிவ பெருமான் திருவருளை இறைஞ்சிச் சிவச் சின்னங்கள் அணிகின்றார். நாடோறும் புலர்வதற்கு முன்னர் கோயிலில் திருவலகிடுதல், நலமலி ஆன்சாணத் தால் நன்றாக மெழுகுதல், மலர் கொய்து மாலைகள் தொடுத்தமைத்தல் முதலிய திருப்பணிகளை விருப்புடன் செய்து இறைவனைப் போற்றுகின்றார்.

திருவதிகை இறைவனை நாடோறும் வழிபட்டிருக்கும் திலகவதியார் தம்முடைய தம்பியின் புறச்சமயப் பிடிப் பினை எண்ணிப் பெரிதும் வருந்துகின்றார். திருவதிகைப் பெருமானை இறைஞ்சி நின்று, எம்பெருமானே, நீர் என்னை ஆண்டருளினீராகில், அடியேன் பின் பிறந்த வனைப் புறச் சமயப் படுகுழியினின்றும் எடுத்தாண்டு உய்விக்க வேண்டும்’ எனப் பல முறையும் விண்ணப்பிக்கின் றார். சிவநெறியில் உறைப்புடைய திலகவதியாரின் கனவில் தோன்றுகின்றார் திருவதிகைப் பெருமான்: நீ உன் மனக் கவலையைத் தவிர்ப்பாயாக; நின் தம்பி முன்னமே முனியாகி எம்மையடையத் தவம் முயன்றான். அன்னவனுக்கு இனிச் சூலை நோயைத் தந்து ஆட்கொள் வோம்’ என்று அருள் செய்கின்றார். அவ்வண்ணமே. தருமசேனர் வயிற்றில் சூலை நோய் வந்து பற்றுகின்றது.

கொண்டே எடுப்பித்த குணபரேசுவரம் இக் கோயிலுக்கு அருகிலுள்ளது. அப்பரும் திலகவதியாரும் சரியைத் தொண்டு செய்த அருமைத் தலம். சுந்தர மூர்த்திக்கு திருவடி தீட்தை இசய்த திருவிளையாடல் நிகழ்ந்த சித்த் வட மடம் கோயிலின் தெற்கு வீதியில் உள்ளது. அருகில் கெடிலநதி ஓடுகின்றது. அட்ட வீரட்டங்களுள் இது திரிபுரம் எரித்த வீரட்டம் (5.53:4), திரிபுர தகன் உற்சவம் சித்திரைப் பெருவிழாவில் திருத்தேரோட்டத்தன்று நடை பெறுகின்றது.

2. பெ. பு: திருநாவுக்கரசு - 44

3. டிெ. டிெ, 48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/61&oldid=634413" இலிருந்து மீள்விக்கப்பட்டது