பக்கம்:நாவுக்கரசர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூலைநோயால் தடுத்தாட்கொள்ளப்பெறுதல் i

தருமசேனர் படும்பாடு: இறைவன் அருளால் தருமசேன ரைப் பற்றின சூலை நோய் வடவைப் பெருந்தியும் ஆல காலவிடமும் வச்சிரப்படையும் கொடுமை விளைவிப்பன பிறவும் ஒன்றாகத் திரண்டு வருத்துதல்போல் குடரைக் குடைந்து வருத்துகின்றது. இந்த நோயின் துன்பத்தைத் தாங்க முடியாமல் பாழியறையில் மயங்கி வீழ்கின்றார். அவர் சமண் சமயத்தில் தாம் கற்ற மந்திரங்களையெல் லாம் கையாண்டு பார்க்கின்றார்; அது தணியவில்லை. மாறாக, அது முடுகி வருத்துகின்றது. தருமசேனர் படும் துன்பத்தைக் கண்ட சமணர்கள் பலருங் கூடி :உயிரைக் கவரும் கொடிய நஞ்சினை யொத்த சூலை நோய் இவரை வருத்துகின்றதே. இதற்கு நாம் என் செய்து இதனைத் தனிப்போம்?’ எனப் பெரிதும் கவலைப்படலாயினர். தம் சையிலுள்ள குண்டிகை நீரை மந்திரித்துக் குடிப்பிக் கின்றனர்; மயிற்பீலி கொண்டு காலளவும் தடவுகின்றனர். இச் செயல்களால் சூலை நோய், நெய்யிட்ட நெருப்பு மேலும் பெருகி எரிவதுபோல், பன்மடங்கு அதிகரிக் கின்றது. இதனைக் கண்டு சோர்வுற்ற சமணர்கள் :ஐயோ, இனி நாம் என் செய்வோம்’ என்று கலங்கிய உளத்தினராய், இது நம்மாற் போக்கற்கரிய நோயாகும்: என்று சொல்லித் தருமசேனரைக் கைவிட்டு அகன்று போகின்றனர்.

இந் நிலையில் சூலை நோயால் அல்லலுற்றுச் சோர்வுற்ற தருமசேனர் தம்முடைய பழைய உறவினரை எண்ணுகின்றார். அப்பொழுது தம்முடைய தமக்கை யாரைப் பற்றிய நினைவு எழுகின்றது. தமக்கு அடிசிலமைப் பவனை அழைத்துத் தாம் படும் துன்பத்தைத் தமக்கை யாருக்குக் கூறி வரும்படி அனுப்புகின்றார். அவனும் திருவதிகையை அடைந்து, மலர் கொய்ய நந்தவனத்திற்குச் செல்லும் அருந்தவச் செல்வி திலகவதியாரைக் கண்டு வணங்குகின்றான். நும்முடைய திருத் தம்பியாரின்

ஏவலினால் யான் இவண் போந்தேன்’ எனச் செப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/62&oldid=634414" இலிருந்து மீள்விக்கப்பட்டது