பக்கம்:நாவுக்கரசர்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 நாவுக்கரசர்

கின்றான். திலகவதியார் இதனைக் கேட்டு, தீங்குளதோ?” என வினவுகின்றார். சூலை நோய் உயிரை மட்டும் போக்காமல் நின்று குடரை முடக்கித் துன்புறுத்துகின்றது. அமணர்கள் யாவரும் நும் தம்பியைக் கைவிட்டனர். இச் செய்தியை நும்பால் தெரிவிக்குமாறு சொல்லியனுப்பி னார். இருட்டோடு இருட்டாகத் திரும்பி வருமாறும் பணித்தனர்’ என்றுகூறுகின்றான், அட்டில் அமைப்போன். இதனைச் செவிமடுத்த திலகவதியார் நான் உன்னுடன் போந்து நன்றறியா அமண்பாழிக்கு வருவதற்கில்லை என்ற மறுமொழியைத் தம்பியின் திருச் செவியில் சாற்றுவாயாக’ என்று சொல்லியனுப்புகின்றார். அடிசிலாக்குவோனும் தில்கவதியாரை விட்டு அகன்று தருமசேனரை அடைந்து தமக்கையார் கூறியதனைத் தெரிவிக்கின்றான்.

திருவதிகையை அடைதல்: அ ட் டி ல ைம ப் போன் கொண்டு வந்த செய்தியை அறிந்த தருமசேனர், இனி இதற்கு யான் யாது செய்வேன்?’ என்று சொல்லி அயர் வுறுகின்றார். இந் நிலையில் சிவபெருமானின் திருவருளும் ன்ககூடப் பெறுகின்றது. இம்மைக்கும் மறுமைக்கும் ஒவ்வாத சமண் சமயத்தைத் துறந்து என் தமக்கையாரின் திருவடிகளை வணங்கி உய்வேன்’ என்று கூறிய வண்ணம் திடசித்தராகின்றார். இதனால் புதியதோர் உணர்ச்சி தம்மைப் பிடித்து உந்த ஒருவாறு சோர்வு அகன்று எழு கின்றார். உடுத்தபாய், பிடித்த குண்டிகை, தொடுத்த மயிற் பீலி ஆகியவற்றை வீசியெறிகின்றார். தூய வெள்ளாடை உடுத்துத் தமக்குப் பற்றுக் கோடாக வர உடன் பட்டாரைப் பற்றிக் கொண்டு சமணப் பள்ளியைக் கடந்து, நள்ளிரவில் ஒருவரும் காணா வண்ணம் பாடலி புரத்திலிருந்து திருவதிகையை நோக்கிப் புறப்பட்டு வரு கின்றார்; திலகவதியார் தங்கியிருக்கும் திருமடத்தை நண்ணுகின்றார்.

திருமடத்தை அடைந்த மருள்நீக்கியார் தம் தமக்கையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/63&oldid=634415" இலிருந்து மீள்விக்கப்பட்டது