பக்கம்:நாவுக்கரசர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூலைநோயால் தடுத்தாட்கொள்ளப்பெறுதல் 2f

‘நமது குலம், செய்த நற்றவத்தின் பயன் அணையிர்’ இவ்வுடம்பினைப் பற்றிய சூலை நோயினைத் தாங்க முடி யாமல் நும் திருவடிகளைச் சரண் அடைந்தேன். இனி யான் அறியாமையில் ஆழ்ந்து மயங்காமல் துயர்க் கடலினின்றும் உய்ந்து கரையேறுதற்குரிய நன்னெறியினைப் புகட்டு வீராக’ என்று விண்ணப்பம் செய்கின்றார். தம்பியாரின் மனநிலையினை உணர்ந்த தமக்கையார் சிவபெருமானின் திருவருளை நினைந்து உருகுகின்றார்; கைகூப்பித் தொழு கின்றார். தம்பியாரை நோக்கி, உறுதிப் பொருள் கொண்ட தெய்வக் கொள்கையற்ற புறச் சமயப் படுகுழி யில் வீழ்ந்து துயருழந்தீர்; இப்பொழுது எழுந்தீர்’ என மொழிய, மருள் நீக்கியாரும் சூலை நோயுடன் நடுக்க முற்றெழுந்து தமக்கையாரைத் தொழுகின்றார். தமக்கை யாரும் தம்பியாரை நோக்கி, நும்மைப் பற்றிய இந்நோய் இறைவனது திருவருளே என அறிவீராக. தன்னை ச் சரண்புக்காரது பாசத்தளையை நீக்கி இன்னருள் புரியும் இறைவன் கழலடிகளைக் பணிந்து பணி செய்வீராக’ எனப் பணிக்கின்றார்.

தம்பியாரும் தமக்கையாரது அருட்பணியை ஏற்றுக் கொண்டு இறைஞ்சி நிற்கின்றார். தம் தம்பியார் திருவதிகை வீரட்டானத் திருக்கோயிலிற் புகுவதற்குத் தகுதியுடையவராம்படி, திலகவதியார் க யி ைல ப் பெருமானின் கழலடிகளை நினைந்து அவனது திருவருள் வண்ணமாகிய திருநீற்றினைத் திருவைத்தெழுத்தினை ஓதிக் கொடுத்தருளுகின்றார்.மருள் நீக்கியாரும் அவற்றைப் பணிந்து ஏற்று, பெருவாழ்வு வந்ததெனக் கருதி அ வெண்ணிற்றினை உடலெங்கும் பூசி அணிகின்றார். தமக் உய்யும் நெறி தரும் தமக்கையார்க்குப் பின்னே தாமு. திருவதிகைத் திருக்கோயிலுக்குப் புறப்பட்டுப்போகின்றா

சூலை நோய் தீர்த்து. ஆட்கொள்ளப்பெறுதல்: திரு. அணிந்தவுடன் மருள் நீக்கியாரின் அகத்திருள் அக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/64&oldid=634416" இலிருந்து மீள்விக்கப்பட்டது