பக்கம்:நாவுக்கரசர்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. நாவுக்கரசர்

பெறுகின்றது; விடியற்காலத்தில் உலகைக் கவித்துக் கொண்டிருந்த் புற இருளும் நீங்குகின்றது. இத்தகைய திருப்பள்ளி எழுச்சிக் காலத்தில் தவச் செல்வியாகிய திலகவதியார் திருவலகும் திருமெழுக்குங் கொண்டு திருக் கோயிலுக்குப் புறப்படுகின்றார். தம்பியாரும் உடன் செல்லுகின்றார். மருள் நீக்கியார் திருக்கோயிலைத் தொழுது வலங்கொண்டு நிலமிசை வீழ்ந்து திருவதிகை வீரட்டானத்து இறைவனை இறைஞ்சுகின்றார். இந் நிலையில் இறைவன். திருவருளால் செந்தமிழ்த் தமிழ் மாலைகளைப் பாடிப் போற்றும் உணர்வு அவருக்கு உண்டாகின்றது. இந்த உணர்வால் தூண்டப்பெற்றுத் தம்மை மயக்கத்தில் ஆழ்த்தும். சூலை நோய் நீங்கும் பொருட்டுத் திருவதிகைப் பெருமானை கூற்றாயினவாறு’ (4. 1) என்ற முதற் குறிப்பினையுடைய செந்தமிழ்ப் பாமாலையை உள்ளத்தில் பேரன்பு பொங்கப் பாடிப் போற்றுகின்றார்.

கூற்றாயின வாறு விலக்ககிலீர்

கொடுமை பல செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே இரவும் பகலும்

பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாதென் வயிற்றி னகம்படியே குடரொடு துடக்கி முடக்கியிட ஆற்றே னடியேன் அதிகைக்கெடில

வீரட்டானத் துறையம் மானே (1) என்பது இப்பதிகத்தின் முதற்பாடல். நிலை பெற்ற பெரு வாழ்வைத் தரும் இத்திருப்பதிகத்தைப் பாடிய பொழுது அவர்தம் வயிற்றில் புகுந்து வருத்திய சூலை நோய் விரை வில் நீங்கி விடுகின்றது. மருள் நீக்கியாரும் இறைவனின் கருணைக் கடலில் மூழ்கித் திளைகின்றார்.

இந்நிலையைச் சேக்கிழார் பெருமான் மிக அற்புத மாகக் காட்டுவர். இறைவனது திருவருள் அடியேற்கு

4. பெ. பு: திருநாவுக்கரசு. 72,73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/65&oldid=634417" இலிருந்து மீள்விக்கப்பட்டது