பக்கம்:நாவுக்கரசர்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணர்களின் சூழ்ச்சி 27

பழி சுமத்தி இங்கு நமக்கு இழிவு உண்டாகத் தம் தமக்கை யாரைச் சார்ந்து சைவராகி நம்மையும் நம் சமயக் கடவுளையும் இகழ்ந்தனர்’ என்றதொரு பொய் வழக் கினைப் புனைந்து வேந்தனிடம் முன்னதாகவே சென்று முறையிடுவதே தக்கது என்ற முடிவுக்கு வருகின்றனர்.

இங்ஙனம் சூழ்ந்து முடிவெடுத்த சமயத் துறவிகள் பல்லவ வேந்தனின் தலைநகாை. அடைந்து, அரண்மனை யினுள் புகுந்து அரசனை நோக்கி, மன்னனே, எங்கட்குத் தலைவராக இருந்த தருமசேனர் தமக்குச் சூலை நோய் வந்தது எனப் பொய்கூறிச் சைவராகி நம் சமயத்தைத் துறந்தார்’ என்று செப்புகின்றனர். இவ்வுரை கேட்ட பல்லவ வேந்தன் மிகவும் சினங் கொண்டு, குற்றம் மிக்க உள்ளத்தையுடைய தம் சமயத்தைச் சார்தற் பொருட்டுப் பொய்ப்பிணி கொண்டு புகழ்மிக்க நம் சமயத்தை அழிக்க முயல்வது முறையோ? அத்தீயோனை இவண் கொண்டு வாருங்கள்’ என்று பணிக்கின்றான்.

அரசனது ஆணையினை நிறைவேற்றத் துணிந்த அமைச்சர்கள் சேனை வீரர்களுடன் திருவதிகையை நோக்கி விரைகின்றனர். சிவனடியாராகிய திருநாவுக் கரசரை அடைந்து, பெரியீர் தும்மை அழைத்து வரும்படி எம்மை அரசன் ஏவினான்’ என்று உரைக்கின்றனர்: இதனைக் கேட்ட திருநாவுக்கரசர்,

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;

நரகத்தில் இடர்ப்படோம்; கடலை இல்லோம்; ஏமாப்போம்; பிணியறியோம்; பணிவோ மல்லோம்.

இன்பமே எங்காளும் துன்பம் இல்லை; தாமார்க்கும் குடியல்லாத் தன்மை யான

சங்கரனற் சங்கவெண் குழ்ையோர் காதிற் கோமாற்கே நாம்என்றும் மீளா ஆளாய்க்

கொய்மலர்சே வடியிணையே குறுகினோமே (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/70&oldid=634423" இலிருந்து மீள்விக்கப்பட்டது