பக்கம்:நாவுக்கரசர்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நாவுக்கரசர்

என்ற முதற்பாடலையுடைய திருப்பதிகத்தைப் (6.98) பாடுகின்றார். அரசன் ஆணைக்கு இது மறுமாற்றமாக அமைவதால் இது மறுமாற்றத் திருத்தாண்டகம்’ என்னும் திருநாமத்துடன் வழங்குகின்றது.

இத் திருப்பதிகத்தின்கண் திருநாவுக்கரசர் தாம் இவ்வுலக வாழ்க்கையில் எத்தகைய தொடர்புமின்றித் தேவாதி தேவனாகிய சிவன் ஒருவனையே சிந்தித்து அவனடியார்கட்கு ஆட்பட்டு வாழும் உறுதிப் பாட்டினை யும் எத்தகைய குற்றமுமற்ற தாம் மண்ணாள் வேந்தராகிய எவர்க்கும் அஞ்ச வேண்டியதில்லை என்பதையும் தெளி வாக அறிவுறுத்துகின்றார். விலையுயர்ந்த ஆடைகளை உடுத்துப் பொன்னாலும் மணியாலும் ஆன அணிகலன் களைப் பூண்டு இவ்வணியை ஆட்சிபுரிந்து பட்டத்து யானை மீது உலாப் போகும் மன்னன் சொல்வழிபடங்கிப் பணிந் தொழுகும் கீழ்மை நிலை தம்மனோர்க்கு இல்லை என்பார்,

துகிலுடுத்துப் பொன்பூண்டு திரிவோர் சொல்லும்

சொற் கேட்கக் கடவோமோ துரிசற் றோமே. (2) என்றும்,

பாராண்டு பகடேறி வருவார் சொல்லும்

பணி கேட்கக் கடவோமோ, பற்றற் றோமே. (3) என்றும் கூறுகின்றார்.

மேலும் அந்த அமைச்சர்களை நோக்கி, தும்மை அனுப்பினவன் தொண்டை நாட்டை ஆளும் பல்லவ வேந்தன். அவனேயன்றி இந்த நாவலந்தீவு முழுவதையும் தன்னடிப் படுத்திய மன்னர் மன்னனே தும்மை எம்பால் விடுத்தானாயினும் யாம் அவனைப் பொருளாக மதி யோம்’ என்பார்,

நாவலந்தீ வகத்தினுக்கு நாத ரான காவலரே ஏவிவிடுத்தாரேனும்

கடவுமலோம்; கடுமையொடு களவற்றோமே(6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/71&oldid=634424" இலிருந்து மீள்விக்கப்பட்டது