பக்கம்:நாவுக்கரசர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 2 நாவுக்கரசர்

தேனுகந்து மலர்ப்பாதத்

தமுதுண்டு தெளிவெய்தி

ஊனந்தான் இலராகி

உவந்தி ருந்தார்*

என்று காட்டுவர். எனினும் மனம் பொறுக்கலாற்றாத சமணர்கள் அரசனிடம் சென்று, மன்னா, அவன் முன்னர் நம் சமயத்தில் இருந்து பெற்ற மந்திர வலியாலே, வேவாமல் பிழைத்திருக்கின்றான். இனி அவனுக்கு நஞ் சூட்டுவதே தகும்’ என்று கூறுகின்றனர். மன்னனும் :அவ்வாறே செய்யுங்கள்’ எனப் பச்சைக்கொடி காட்ட, அமணர்கள் வஞ்சனையால் நஞ்சு கலந்த பாலடிசிலை அமுதுசெய்யப் பண்ணுகின்றனர். இ ைற வ ன து ஐந்தெழுந்து மந்திரத்தை இரவும் பகலும் மறவாது ஒதும் மாண்புடைய நாவுக்கரசர் சமணர்களின் வஞ்சனையத் தெரிந்து கொண்ட் நிலையிலும் நாதன் அடியார்க்கு நஞ்சும் அமுதாம் என்று கூறி நஞ்சு கலந்த பாலடிசிலை அமுதுசெய்து யாதொரு தீங்குமின்றி இனிதே இருக் கின்றார்.

நாவுக்கரசர் இருந்த நிலையை சேக்கிழார் பெருமானும் வியந்து போற்றுகின்றார்.

பொடியார்க்குங் திருமேனிப்

புனிதர்க்குப் புவனங்கள் முடிவாக்கும் துயர்நீங்க - முன்னைவிடம் அழுதானால் படியார்க்கும் அறிவரிய

\ பகுதியா தம்முடைய அடியார்க்கு நஞ்சமுதம்

ஆவதுதான் அற்புதமோ? .

4. பெ.பு: திருநாவுக்.101 5. டிெ. டிெ, -105

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/75&oldid=634429" இலிருந்து மீள்விக்கப்பட்டது