பக்கம்:நாவுக்கரசர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணர்களின் சூழ்ச்சி 33

என்பது அவர்தம் திருவாக்கு. நாவுக்கரசரும் நஞ்சினையும் விரும்பியுண்ணத்தக்க நல்லமிழ்தமாக மாற்றியருளிய இறைவனது பேரருட்டிறத்தை,

துஞ்சிருள் காலை மாலை

தொடர்ச்சியை மறந்தி ராதே அஞ்செழுத் தோதி நாளும்

அரனடிக் கன்ப தாகும் வஞ்சனை பாற்சோ றாக்கி

வழக்கிலா அமணர் தந்த நஞ்சமு தாக்கு வித்தார்

நனிபள்ளி அடிகளாரே. (4.70:3)

என வரும் திருநேரிசையில் தெளிவாகக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமையைக் கண்டு மகிழலாம்.

நஞ்சினை உண்டும் சாகாமல் பிழைத்திருந்த நாவுக்கரச ரைக் கண்ட சமணர்கள் வெவ்விடமும் இவனுக்கு அமுதா யிற்று. இனி, இவன் பிழைப்பானாகில் நமக்கு விநாசமே.” என்று நடுக்கமுறுகின்றனர். அரசனிடம் சென்று, வேந்தரே, நாம் நஞ்சு கலந்த உணவை உண்பிக்கவும் நமது சமயத்தில் கற்றுக் கொண்ட மந்திர வன்மை யால் நஞ்சு தன்னைக் கொல்லாதபடிக் காத்துக் கொண்ட்ான். அவன் மரிக்காதிருப்பானாயின் எம்முடைய உயிரும் நும்முடைய ஆட்சியும் அழிவது திண்ணம்’ என முறையிடுகின்றனர். இவர்தம் மொழி கேட்டு மதிகெட்டி மன்னவனும் செற்றவனை இனிக்கடியும் திறம் எவ் வாறு?’ என வினவுகின்றான். ‘நின் பட்டத்து யானையைக் கட்டவிழ்த்து அவனுக்கெதிரே விடுவதே செய்யத் தகுவது எனச் செப்புகின்றனர் அமணர்கள். அரசனும் அவ்வாற்ே செய்யப் ப்னிக்கின்றான். யானையும் கட்டவிழ்த்து விடப் பெறுகின்றது. அஃது ஒரு குன்றம் புறப்பட்டு வருவது

3-grr

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/76&oldid=634430" இலிருந்து மீள்விக்கப்பட்டது