பக்கம்:நாவுக்கரசர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணர்களின் சூழ்ச்சி 37

  • நல்வினை தீவினைகளாகிய இருவகைக் கயிற்றினால் மும்மலமாகிய கற்களுடன் பிணிப்புண்டு பிறவிப் பெருங் கடலில் வீழ்ந்து கரைகாணாது வருந்தும் அறிவிலா மாக்களை அத் துன்பக்கடலினின்றும் எடுத்து இறைவன் திருவடிகளாகிய இன்பக் கரையில் சேர்க்கவல்லது திருவைந் தெழுத்து. இருவினைப் பாசமும் அற்று இறைவன் திருவடி நிழலே சரண் எனக் கொண்ட தெளிந்த பேரறிவினராகிய நாவுக்கரசரை, வலைஞர்களால் சிறிய படகின் துணை கொண்டு கடத்தற்கரிய கருங்கடலில், ஒரு கல்லின்மேல் மிதக்கச் செய்து, கரையேற்றிய இச்செய்தி வியந்துரைத்தற் குரியதோ என்கின்றார்.

கடல் தெய்வமாகிய வருணன் அலைகளாகின்ற கைகளால் கல்லே சிவிகையாக வாகீசரைத் தாங்கிக் கொண்டு திருப்பாதிரிப்புலியூரின் அருகே கொண்டு வந்து சேர்க்கின்றான். இதனைச் சேக்கிழார் பெருமான்,

அத்திருப் பதியினில்

அனைந்த அன்பரை மெய்த்தவக் குழாமெலாம் மேவி ஆர்த்தெழ எத்திசை யினும் அர’

என்னும் ஓசைபோல் தத்துநீர்ப் பெருங்கடல்

தானும் ஆர்த்ததே.”

என்று காட்டும் முறையில் :இயற்கையும் இத்தெய்வ நிகழ்ச்சியில் பங்குகொள்கின்றது’ என்று குறிப்பிடுவர்.

கடலினின்றும் கடலூரில் கரையேறிய நாவுக்கரசர் பெருமானைச் சிவனடியார்கள் மகிழ்ந்து எதிர் கொள்ளு

7. பெ. பு: திருநாவுக். 182

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/80&oldid=634436" இலிருந்து மீள்விக்கப்பட்டது