பக்கம்:நாவுக்கரசர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணர்களின் சூழ்ச்சி 39

செழுநீர் புனல்கங்கை செஞ்சடைமேல்

வைத்த தீவண்ணனே. (8)

என்பது இம்மாலையின் எட்டாவது மலர்.

சொற்றுணைவேதியன் (4. 11) எனத் தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் சமணர்கள் கல்லோடு பிணித்துக் கடலில் தள்ளியபோது நாவுக்கரசரால் அருளிச் செய்யப் பெற்ற தென்பது,

கற்றுணைப் பூட்டியோர்

கடலில் பாய்ச்சினும்

நற்றுனை யாவது

நமச்சி வாயவே (1)

எனப் அப்பதிகத் தொடக்கப் பாடலின் அடிகளில் அடிகள் குறிப்பிடுதலால் அறியலாம். சமணர்கள் கல்லோடு பிணித்துத் தம்மைக் கடலில் தள்ளியபோது தாம் திரு ஐந்தெழுத்தினை ஒதிக் கரையேறி உய்ந்த செய்தி,

கல்லி னோடெனைப்

பூட்டி அமண்கையர் ஒல்லை நீர்புக

நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல்

நீலக் குடியரன் நல்ல நாமம்

நவிற்றியுய்ந்தே னன்றே. (5. 12:1) எனவரும் நீலக்குடிப் பதிகத் திருப்பாட்டில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதைக் கண்டு மகிழலாம்.

திருப்பாதிரிப்புலியூரில் வழிபட்டிருந்த திருநாவுக்கரச ருக்குத் திருவதிகை விரட்டானத்தில் எழுந்தருளியுள்ள பெருமானை இறைஞ்சி மகிழ வேண்டும் என்ற நினைவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/82&oldid=634438" இலிருந்து மீள்விக்கப்பட்டது