பக்கம்:நாவுக்கரசர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 நாவுக்கரசர்

எழுகின்றது. வழியில் திருமாணிக்குழி, திருத்தினை நகர்10 என்ற தலங்களை வழிபட்டுக்கொண்டு கெடிலநதியைக் கடந்து திருவதிகையை அடைகின்றார். பல்லவன் இழைத்த கொடுமைகளையெல்லாம் இறைவன் திருவருளால் வென்ற நாவுக்கரசரின் வருகையைக்கேள்வியுற்ற திருவதிகைப் பெரு மக்கள் நகரை அலங்கரித்து மங்கல வாத்தியங்கள் முழங்க வாகீசரை எதிர்கொண்டு போற்றுகின்றனர். நாவுக்கரசர் நகரில் புகுந்த கோலத்தைச் சேக்கிழார் பெருமான்,

தூயவெண் ணிறு துகைந்தபொன்

மேனியும் தாழ்வடமும் நாயகன் சேவடி தைவரும்

சிங்தையும் கைந்துருகிப் பாய்வது போல்அன்பு நீர்பொழிகண்ணும்

uதிகச் செஞ்சொல் மேயசெவ் வாயும் உடையார்

புகுந்தனர் வீதியுள்ளே.’ என்று காட்டி மகிழ்வர்.

ஆளுடைய அடிகள் (நாவுக்கரசர்) திருவதிகை வீரட் டானத் திருக்கோயிலில் புகுந்து திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளை வணங்குகின்றார். தாம் முன்னர்ச் சமண

9. மாணிக்குழி (திருமாணிக்குழி): கடலூரிலிருந்து 3; கல் தொல்ைவிலுள்ளது. கடலூரிலிருந்து இத்தலத் திற்குப் போகும் வழியில் திருவஹீந்திரபுரம் என்னும் வைணவத்தலம் உள்ளது. (தொண்டை நாட்டுத் திருப்பதிகள்-என்ற நூலில் திருவயிந்திபுரத்து தெய்வ நாயகன்’ என்ற 14.வது கட்டுரையைப் படித்து தெய்வ நாயகனை அநுபவிக்கல்ாம்). திருமால் வாமனாவதாரத் தில் (= மாணி) பூசித்ததைச் சம்பந்தரின் 3.77:4 என்ற பாடல்ால் அறியலாம். (பதிகம் இல்லை)

10. தினைநகர் (தீர்த்தனகிரி) கடலு:ர்.மயிலாடு துறை இருப்பூர்தி வழியில் உள்ள ஆல்ப்பாக்கம் நிலையத்தி லிருந்து 5,_கல் தொலைவிலுள்ளது. (பதிகம் இல்லை)

11. பெ. பு: திருநாவுக்-140

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/83&oldid=634439" இலிருந்து மீள்விக்கப்பட்டது