பக்கம்:நாவுக்கரசர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமணர்களின் சூழ்ச்சி 41

சமயத்தில் சார்ந்தொழுகிய காலத்தில் சிவபெருமானைப் போற்றாது இகழ்ந்திருந்த தம் அறியாமைக்குப் பெரிதும் வருந்தும் நிலையில் ‘வெறிவிரவு கூவிளகல் தொங்க்லானை’ (6.3) என்ற முதற் குறிப்பினையுடைய செந்தமிழ் மாலையை வீரட்டானத்தெம் பெருமானுக்குச் சூட்டு. கின்றார்.

வெறிவிரவு கூவிளகல் தொங்க லானை

வீரட்டத் தானை வெள் ளேற்றி னானை பொறியரவி னானைப் புள்ளுர்தி யானை

பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை அறிதற் கரியசீர் அம்மான் தன்னை -

அதியரைய மங்கை அமர்ந்தான் தன்னை எறிகெடிலத் தானை இறைவன் தன்னை

ஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே. (1)

என்ற இப்பதிக முதற்பாடலில் தெய்வக் கொள்கையில் தெளிவு பிறவாத சமணர்களுடன் கூடித் தம் வாணாளை வீணே கழித்த அறியாமையை நினைந்து பெரிதும் மனம் கவல்வதைக் காணலாம்.

உறிமுடித்த குண்டிகைதங் கையில் தூக்கி

ஊத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக்க ணாய்க் கறிவிரவு நெய்சோறு கையி லுண்டு

கண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன் மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் தன்னை -

மறித்தொருகால் வல்வினையேன் கினைக்க மாட்டேன் எறிகெடில நாடர் பெருமான் தன்னை

ஏழையே னான்பண் டிகந்த வாறே. (8)

என்ற எட்டாம் திருப்பாடலில் தாம் முன்னாளில் சமண் சமயத்தில் சார்ந்தொழுகியபோது சிவபெருமானை நினையாத எளிமையை எடுத்துக் கூறி இரங்குவதைக் காணலாம். இப்பதிகத்தின் ஒவ்வொரு திருப்பாடலிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/84&oldid=634440" இலிருந்து மீள்விக்கப்பட்டது