பக்கம்:நாவுக்கரசர்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவதிகை ஈடுபாடு 53

என்பது ஒன்பதாவது திருப்பாடல். இத்திருத்தாண்டகப் பாடல்கள் எல்லாவற்றிலும் இறைவன் திருவடியே சிறப் பித்துப் பாடப்பெற்றிருப்பதால் இது திருவடித் தாண்டகம் எனப் பெயர் பெறுகின்றது.

செல்வப்புனல் (6. 7) என்று தொடங்கும் திருத் தாண்டக மாலையில்,

சிறையார் புனற்கெடில வீரட்டமும்

திருப்பாதிரிப் புலியூர் திருவாமாத்தூர் துறையார் வனமுணிக ளேத்தகின்ற

சோற்றுத்துறை துருத்தி கெய்த்தான அறையார் புனலொழுகு காவிரிசூழ் ஐயாற் றமுதன்பழன நல்ல கறையார் பொழில்புடைசூழ் காணப்பேரும்

கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே. (3)

என்பது மூன்றாம் பாடல். இறைவனுடைய காப்புக்கள் (இடங்கள்) இவை இவையென எல்லாப் பாடல்களும் (பன்னிரண்டு) முடிவதால் இப்பதிகம் காப்புத் தாண்டகம்” எனப் பெயரேற்கின்றது. தலந்தோறும் அப்பர் பெருமான் தலப்பயணத்திற்குப் புற ப் ப டு மு ன், இப்பதிகத்தைப் பாடுவது, தாம் செல்லவிருக்கும் தலங்களனைத்தையும் எண்ணிப் பார்த்துத் திட்டமிட்டுக் கொள்வதுபோல் அமைந்துள்ளது. இவற்றுள் சில வைப்புத் தலங்கள். இங்ஙனம் திருவதிகையில் திருப்பதிகங்கள் பாடிச் சில நாட்கள் தங்குகின்றார் வாகீசப் பெருமான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/96&oldid=634453" இலிருந்து மீள்விக்கப்பட்டது