பக்கம்:நாவுக்கரசர்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சோழநாட்டுத் திருத்தலப் பயணம் - 1

சமணர்களின் சூழ்ச்சிச் செயல்களைச் சிவபெருமான் திருவருளால் வென்று திருவிரட்டானத் திறைவருக்குத் தொண்டு புரிந்துவரும் நாட்களில் கயிலைநாதன் எழுந்த ருளியுள்ள திருத்தலங்கள் பலவற்றையும் சேவிக்கவேண்டும் என்ற பேரவா திருநாவுக்கரசரின் சிந்தையில் எழுகின்றது. சோழநாட்டுத் திருத்தலங்களின் தொகை 190. இவற்றைப் பல சுற்றுகளில் சேவிக்கின்றார்.

முதல் சுற்று : திருவதிகையிலிருந்து முண்டிச்சரம், என்னும் திருத்தலத்திற்கு வருகின்றார்.'ஆர்த்தான் காண்’ (6.85) என்ற முதற் குறிப்பினையுடைய திருத்தாண்டகச் செந்தமிழ் மாலையைப் பாடிப் போற்றுகின்றார் இத் தலத்து இறைவனை.

கம்பன்காண்; கரைவிடையொன் றேறி னான்காண்;

நாதன் காண்; கீதத்தை கவிற்றி னான்காண்; இன்பன்காண்; இமையா முக்கண்ணி னான்காண்; ஏசற்று மனமுருகும் அடியார் தங்கட்(கு)

1. முண்டிச்சரம் (கிராமம்) : திருவெண்ணெய் நல்லுர் ரோடு என்ற நிலையத்திலிருந்து (விழுப்புரம் விருத்தாசலம் இருப்பூர்தி வழி) கல் தொலைவு. பேருந்து வழி. விழுப் புரம், விருத்தாசலம் என்ற ஊர்களிலிருந்தும் இத்தலத்திற்கு வரலாம். திருவெண்ணெய் நல்லூருக்கு அருகில் உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/97&oldid=634454" இலிருந்து மீள்விக்கப்பட்டது