பக்கம்:நாவுக்கரசர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்நலப் பயணம் - 1 55.

அன்பன் காண்; ஆரழல தாடி னான்காண்;

அவனிவனென்றி யாவர்க்கும் அறிய வொண்ணாச் செம்பொன் காண்: திருமுண்டிச் சரத்து மேய

சிவலோகன்காண்; அவனென் சிந்தை யானே. (3) என்பது மூன்றாவது தமிழ்மணங் கமழும் வாட்ா நறுமலர். இப்பதிகத்தில் 9-வது பாடல் காணப்பெறவில்லை.

அடுத்து, முண்டீச்சரத்து ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு திருவெண்ணெய் நல்லூர் வருகின்றார், திருவருட் டுறை இறைவனை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). அடுத்துத் திருவாமாத்துர் வருகின்றார். இத்தலத்து இறை வனை இரண்டு பதிகங்கள் பாடி வழிபடுகின்றார். ‘மாமாத் தாகிய (5.44) என்று தொடங்கும் பதிகத்தில்,

2. வெண்ணெய் நல்லூர் (திருவெண்ணெய் நல்லூர்) விழுப்புரம். விருத்தாசலம் இருப்பூர்தி வழியில் திருவெண் ணெய் நல்லூர் ரோடு என்ற நிலையத்திலிருந்து 4 கல் தொலைவிலுள்ளது. கடலூர். திருக்கோவலுர்ர் சாலையி லுள்ளது. உமாதேவியார் வழிபட்டமையால் அருட்டுறை’ என்ற பெயரேற்றது. இத்திருத்தலம் சுந்தரமூர்த்தியின் திருமணத்தைத் தடுத்து ஆட்கொண்ட திருத்தலம். மெய் கண்டார் சிவஞான போதம் அருளிச் செய்ததும், கம்ப நாடன் இராமகாதையைப் பாடியதும் இத்தலத்தில் நிகழ்ந் தவை. விருத்த வேதியனாக வந்த இறைவன சுந்தரர் வழக்கை வென்ற இடம் வழக்கு வென்ற அம்பலம்’ என்று கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள இடம் திருக்கோபுர வாயிலுக் கெதிரிலுள்ள 100 கால் மண்டபமாகும். -

3. ஆமாத்துர் (திருவாமாத்துரர்) விழுப்புரத்திலிருந்து 4 கல் தொலைவிலுள்ளது. 16 குருடர்கள் நாடோறும் தேவாரம் ஒதவும் இருவர் அவர்களைக் கைபிடித்து நடத்திச் செல்லவும் திட்டம் செய்யப்பெற்றிருந்ததைக் கல் வெட்டொன்று கூறுகின்றது, இத்தலப் பாசுரங்கள் சில வற்றில் அழகியரே” என்ற பெயர் காணப்பெறுவதால் கல் வெட்டுகளிலும் அழகிய நாயனார் என்ற பெயர் சாணப் படுகின்றது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவுக்கரசர்.pdf/98&oldid=634455" இலிருந்து மீள்விக்கப்பட்டது