பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 : நா. பார்த்தசாரதி சிறுகதைகள் காலம் நினைவிற்கு வந்தது அவருக்கு அதற்குப் பின்பு நரசிம்மனை அருமையான இரண்டொரு முறையே அவரால் சந்திக்க முடிந்தது. "இவர் வெளியிலே காத்துக் கொண்டிருக்கிறாரா நர்ஸ்?” விஸிட்டிங்கார்டைக் காட்டி நர்ஸிடம் கேட்டார் ரகுநாதன். "ஆமாம், ஸார். வரச்சொல்லவா?” “வரச் சொல்லுங்கள்.” நரசிம்மன் உள்ளே வரவும், “வா, வா, நரசிம்மா! வா” என்றார் ரகுநாதன். "ஆமாம் ரகு போன வாரமே என்னை இந்த ஜில்லாவுக்கு மாற்றி விட்டார்கள். உன்னைப் பற்றி இன்றுதான் விசாரித்து அறிந்து கொள்ள நேர்ந்தது.” நரசிம்மன் ஸ்டூலில் அமர்ந்து கொண்டு தான் கொண்டு வந்திருந்த ஆப்பிள் முதலிய பழங்களைப் பையிலிருந்து எடுத்து வைக்கலானார். "இதெல்லாம் எதற்கு அப்பா நரசு நீ என்னை விசாரிக்கவந்ததே பெரிய காரியம்" “என்ன ரகு அப்படிச் சொல்லிவிட்டாய்? ஆயிரமிருக்கட்டும் நோயாளிகளையும், குழந்தைகளையும் வெறுங் கையோடு போய்ப் பார்க்கலாமா?” - “டேய் மணி, இதோ, இந்த மாமா வந்திருக்கிறார், பார். எதிர்ப்புறம் இருக்கும் ஹோட்டலில் போய் காப்பி, டிபன் வாங்கிக் கொண்டு வா. நீ அப்புறம் வீட்டிற்குப் போகலாம்.” - “வேண்டாம் ரகு! பையனை எதற்காகக் கஷ்டப்படுத்துகிறாய்? வீட்டிலேயே டிபனை முடித்துக் கொண்டுதான் புறப்பட்டேன்.” - "பரவாயில்லை நரசு நீ போய் வாங்கிக் கொண்டு வாடா மணி சுருக்க வா” மணி கிளாஸை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். "ஐயோ ரகு! உன் கதி இப்படியா ஆக வேண்டும்? தமிழ்த்தொண்டு, தமிழ்த்தொண்டு என்று இந்தப் பயங்கரமான நோய்க்கு இடங்கொடுத்து விட்டாயே? என்ன காலேஜ் புரொபஸர் வேலை வேண்டியிருக்கிறது? கத்திக் கத்தித் தொண்டை புண்ணாகும் வேலை ஏதோ நீ நல்லபடியாகப் பிழைத்தெழுந்தால் இந்தச் சனியன் பிடித்த வேலையை விட்டு விடு. அப்புறம் என்ன செய்யலாமென்று நான் சொல்லுகிறேன், உனக்கு” "உன்னைப் போல் ஒரு கலெக்டராகவோ, ஜட்ஜாகவோ இருப்பவர்களுக்குப் பணமும் பவிஸூம் அளவற்றுக் கிடைக்கலாம் நரசு. ஆனால் இந்தக் கல்லூரிப் பேராசிரியர் வேலையிலே எனக்குக் கிடைக்கும் ஆத்மதிருப்தி இருக்கிறதே, அது." ரகுநாதன் கூறிக் குறையையும் முடிக்கவில்லை.நரசிம்மன் இடைமறித்தார். "ஆமாம்! பெரிய ஆத்மதிருப்தியைக் கண்டுவிட்டாய் உன் ஆத்ம திருப்தியின்

இலட்சணத்தைத்தான் நான் இதோ பார்க்கிறேனே! என்ன கோரம் போன தடவை உன்னைப் பார்த்தபோது நீ எப்படி நன்றாக இருந்தாய் ரகு இப்போது வெறும் தோல் மூடிய எலும்புக்கூடுதான் உன்தோற்றம், ஐயோ! இதையா நீ ஆத்மதிருப்தி என்கிறாய்?