பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் தொகுதி ஏணி * 39 'ஆத்மஹத்தி என்று சொன்னாலாவது பொருந்தும் ரகு" உணர்ச்சி மிகுதியால் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே நரசிம்மனுக்குக் கண்களில் நீர் துளித்துவிட்டது. குரல் நைந்து கரகரத்தது. “நீ தவறாக எண்ணுகின்றாய் நரசு எனக்கு வந்திருக்கும் இந்த நோய்க்குக் காலேஜும், வேலையும் காரணம் என்று மட்டும் சொல்லிவிடலாமா? நான் அப்படி நினைக்கவில்லை. இதோ பாரேன்! இரண்டு மாதச் சம்பளத்தோடு, காலேஜ் செலவிலே என்னை இங்கே சிகிச்சைக்கு அனுப்பியிருக்கிறார்கள். காலேஜின் நிர்வாகக் குழுவினரோ என்மேல் தேவதா விசுவாசம் வைத்திருக்கிறார்கள். பையன்களும் மற்றவர்களுமோ என்மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள். திருப்தியோடு வாழ்வதற்கு இந்த அன்பும் ஆதரவுமே போதுமானவை என்று எனக்குத் தோன்றுகிறது. நரசு, இதை நீ என் குறையாகவோ, பலஹீனமாகவோ, நினைத்துக் கொண்டாலும் அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. வாழ்வின் ஜீவதத்துவம் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மேல் செலுத்தும், அன்பு, ஆதரவு, புகழ் இவைகளிலே இருப்பதைப் போல, செல்வத்திலோ,செல்வாக்கிலோ இருப்பதாக நான் கருதவில்லை. அன்று கல்லூரியில் படிக்கும் நாளிலிருந்தே இது என் மனத்தின் இலட்சியமாக அமைந்துவிட்டது, நரசு நான் செய்ய இனி என்ன இருக்கிறது?” "உன்னுடைய இந்த மனோபாவம் பாராட்டத்தக்கதாக இருக்கலாம்.ரகு! ஆனால் ஒன்று மட்டும் நினைவு வைத்துக் கொள். செல்வத்துக்கும், செல்வாக்கிற்கும் ஆசைகொள்ளாமல், தொண்டுக்கும் தூய்மையான வாழ்விற்குமே ஜீவனை அர்ப்பணிக்கும் தியாகிகளை இந்தப் பொல்லாத உலகம் வெறும் ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டு, என்றாவது அது ஒடிந்தால் தூக்கி எறிந்துவிடுகிறது, ரகு!” மணி காப்பி, டிபனுடன் வந்தான். “பேச்சு இருக்கட்டும் நரசு! நீ முதலில் டிபன் சாப்பிடு. பின்பு பேசுவோமே?” ரகுநாதன் நரசிம்மனை வேண்டிக் கொண்டார். ரகுநாதனின் வற்புறுத்தலை மீற முடியாமல் நரசிம்மன் சாப்பிடத் தொடங்கினார். "அப்பா! நான் போய்த்தான் அம்மாவுக்கு ஜவ்வரிசிக்கஞ்சி போட்டுத் தர வேண்டும்” மணி சொன்னான். - "ஏன் ரகு, வீட்டிலும் ஏதாவது உடம்பு செளகரியம் இல்லாத நிலையோ? இதுவரை பேசிக் கொண்டிருந்தோமே நீ என்னிடம் ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லையே” நரசிம்மன் ரகுநாதனைக் கேட்டார். "ஆமாம் நரசு எனக்கே இப்போதுதான் தெரியும். இவன் சொன்னான்.” என்று நரசிம்மனுக்கு மறுமொழி கூறிவிட்டு, மணியின் பக்கம் திரும்பி, 'மணி, நீ ஒன்று செய்யேன்? நேரே வீட்டுக்குப் போய் அம்மாவை ஒரு வண்டி வைத்து அழைத்துக் கொண்டு உறையூரில் தாத்தா வீட்டில் கொண்டு போய் விட்டுவிடேன். உடம்பு செளகரியமில்லாமல் அவள் தனியே இங்கே கஷ்டப்பட வேண்டாம் பாரு இங்கே என்னைக் கவனித்துக் கொள்ள நிறையப் பேர் இருக்கிறார்கள். அவளுக்கு” சொஸ்தமாகி, இங்கே திரும்பலாம் என்ற நிலை ஏற்படும்வரை நீயும்கூடப்