இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இரண்டாம் தொகுதி : வேலையும் விசாரணையும்
1013
மறுநாள் காலை அப்பாவும், நானும் செங்கற்பட்டுக்குப் புறப்பட்டோம். கல்யாணம் முடிந்ததும் இருவரும் சேர்ந்தே ஊர் திரும்புவதாக ஏற்பாடு. கலியாண மாப்பிள்ளை ‘ரகு’ என்பதை அறிந்ததும், நானும் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ரகு கொடுத்த பத்திரிகையின் நினைவும் எனக்கு அப்போதுதான் வந்தது.
ரயிலுக்குப் புறப்படும் போது வீட்டுக்காரர் வந்து சேர்ந்தார். “பையனுக்கு நம்ம ஊரிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டேன். உங்கள் உதவிக்கு நன்றி, இந்தாருங்கள் வீட்டுச் சாவி!”
அப்பாவிடமிருந்து முதலியார் சாவியைப் பெற்றுக் கொண்டார்.
“அப்படிங்களா! ரொம்ப நல்லதுங்க!” என்ற வார்த்தைகள் அவரிடமிருந்து வெளி வந்தன. இனி அவர் வேலையைப் பற்றி என்னிடம் விசாரிக்க முடியாதல்லவா?
(1978-க்கு முன்)