இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1138
நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
இன-பிரதேச-மக்களும் விலகி இருக்கிற நேரங்களை விட நெருங்கி இருக்கிற நேரங்களிலேயே அதிகம் வேறுபடுகின்றனர். நெருங்கி உட்காரும் போதே முதலில் வேற்றுமைகள்தான் தலை தூக்குகின்றன.
எனவே, குற்றுயிரும் குலையுயிருமாக மீதமிருக்கும் ஒருமைப்பாட்டைக் கொல்லாமல் காப்பாற்ற வேண்டுமானால் நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் இந்தக் கமிட்டியை உடனே கலைப்பதுதான்”.
என்று துணிந்து எழுதிக் கையொப்பமிட்டு ‘கான்ஃபிடென்ஷியல்’ என்று சீல் வைத்து உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் கமிட்டியின் தலைவர்.
'’ன் செய்தது சரிதானா’ என்று உறுத்தல் அவருள்ளேயே எழுந்தது. சரியில்லையானாலும் அது தவறில்லை என்றும், அவருக்கே உறுதியாகத் தோன்றியது அப்போது,
(கல்கி, விடுமுறை மலர் - 1984)