பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

678 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

———————————

கேட்டு அவர்கள் பதில் சொல்லியபோது அவருடைய முகமலர்ச்சியே குறைந்து போயிற்று.

“சிவானந்தம் ரொம்பப் பெரிய ஜீனியஸ்! அவரைப் போல பல விஷயங்களிலும் மேதையாயிருக்கிற ஒருவரைப் பாராட்ட வேண்டியதுதான். ஆனால், எதுக்கும் நீங்க ‘ஸண்டே ஈவினிங் வந்து என்னைப் பாருங்க” என்று நல்ல நூலை நடுவில் அறுத்துவிட்ட மாதிரி பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டார் அந்த ‘மில்’லர் எடுத்த எடுப்பிலேயே ஏற்பட்ட இந்தத் தோல்வியைச் சகித்துக் கொண்டு இரண்டாவதாகப் பல தினசரிப் பத்திரிகைகளுக்கு அதிபராகிய ஒரு பத்திரிகை முதலாளியிடம் சென்றார்கள். ‘சிவானந்தத்தைப் போல் ஒரு ‘எடிட்டர்’ இந்தத் தமிழ்நாட்டிலேயே இல்லை. அவரைப் போல அற்புதமான மேடைப் பேச்சாளாரும் இல்லை; அவரைப் பாராட்ட வேண்டியது அவசியம்தான்; ஆனால் அந்தப் பாராட்டு விழாக் கமிட்டிக்கு யாரைத் தலைவராகப் போட்டிருக்கீங்க?’ என்று தேவையில்லாததொரு கேள்வியைப் போட்டார் பத்திரிகை முதலாளி.பத்திரிகைகளுக்காக வாங்குகிற ‘நியூஸ் பிரிண்ட்’ கோட்டாவை அச்சடித்து விற்பதைவிட வெள்ளைக் காகிதமாகவே விற்பதில் அதிகக் கவலை செலுத்தக் கூடியவர் அவர். மணிவிழாக் குழுவின் தலைவராயிருக்கிற இளைஞர் பெயரைக் கூறியவுடன் அந்தப் பத்திரிகை முதலாளி முகத்தைச் சுளித்தார் சலிப்போடு. அவர்களிடம் கூறலானார். ‘இன்னும் பாப்புலர் மேனாக’ யாராச்சும் ஒருத்தரை ‘பிரஸிடெண்ட்’டாகப் போடுங்க. ஒரு பெரிய விழாவுக்குத் தலைவராயிருக்கிறதுன்னா அதுக்கு ஒரு ‘ஸ்டேட்டஸ்’ வேணாமா?”

“ஸ்டேட்டஸும் பாப்புலாரிட்டியும் இருந்தால் மட்டும் போதுங்களா? ஒடியாடி உழைக்கிறவங்களாகவும் இருக்கனுமே” என்று மனம் பொறுக்காமல் பதில் கூறிவிட்டார் அந்தக் குழுவில் இருந்த இளைஞர் ஒருவர். பத்திரிகை முதலாளி வளைத்து வளைத்துச்சொல்லிய விதத்திலிருந்து தாமே கமிட்டித் தலைவராக இருக்க அவர் ஆசைப்படுவது தெரிந்தது. அதை அப்பட்டமாகச் சொல்ல வெட்கப்பட்டு இப்படிக் கூறினார் வெள்ளைக் காகிதத்தைக் கருப்புப் பணமாக மாற்றுவதில் வல்லவரான அந்தப் பத்திரிகை முதலாளி. தம்மால் பொருளுதவி செய்யமுடியுமா இல்லையா என்பதைக் கூறாமலே சுற்றி வளைத்து வேறு எவை எவையோ தேவையில்லாத விஷயங்களைப் பேசிக் கொண்டே போனார் அவர்.

முடிவாக ஒரு பயனும் இல்லாமலே அங்கிருந்தும் அவர்கள் வெளியேறும் படி ஆயிற்று. மூன்றாவதாக ஒரு திரைப்பட நடிகரிடம் வசூலுக்குப் போனார்கள். அந்த நடிகர் எல்லோரையும் மிக மிக ஆர்ப்பாட்டமாக வரவேற்றுப் பட்டுறை தைத்த பாங்கான சோபாக்களில் உட்கார வைத்துப் பேசினார். தமக்கு இராப்பகலாக ஒய்வு ஒழிவின்றி ஷட்டிங் இருப்பதாகவும்,தம்மால் எந்தப் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடிவதில்லை என்றும் கூறினார் அவர் நண்பர்கள் சிவானந்தத்தின் மணிவிழாவைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்கள். நடிகர் உடனே ஆரம்பித்து விட்டார், “அவரைப் போன்ற ஜீனியஸ் எல்லாம் இப்பிடிக் குடத்து விளக்காக