உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1192 * நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

பெருமையளிக்கிறது. வேறு நினைப்புக்கள் இர்ரெலவண்ட்; அவுட் ஆஃப் காண்டெக்ஸ்ட்”

 “இந்த இண்டர்நேஷனல் செமினாரை நடத்தியவர்கள் குசேலதேவர் பற்றிய வாழ்க்கைச் சுருக்கத்தையோ, அவர் கவிதைகளின் சாராம்சத்தையோ உங்களுக்கு எப்போதாவது, இங்கு வந்த பிறகாவது கூறினார்களா?”
 “மன்னிக்கவும். எந்த நிலையிலும் அந்தக் கவிஞரைப்பற்றி எனக்கு யாரும் எதுவும் கூறவில்லை. வருத்தப்படுகிறேன். நானாக முயன்று விசாரித்த போதும், "யூ நீட் நாட் கோ இன் டு த ஸ்ப்ஜெக்ட்"- என்று தட்டிக் கழித்துவிட்டார்கள்.”
 இந்த நான்கு பேட்டிகளையும் வெளியிட்டுவிட்டு, 'டிஸ்பியூட்' வார இதழ் 'தி டார்க்கர் ஸைட் ஆஃப் த ஸெமினார்' என்ற தலையங்கம் ஒன்றும் தீட்டியிருந்தது. அந்தத் தலையங்கத்தில் கருத்தரங்கு நடத்தப்பட்ட விதத்தைக் கண்டித்திருந்ததுடன் குசேலதேவரின் கவிதை ஒன்றுக்குரிய விளக்கத்தையும் கூறி நயமாகச் சாடியிருந்தது. அந்தத் தலையங்கத்தின் பிற்பகுதி பின்வருமாறு : 
 “மனிதர்களின் அறிவு நுண்ணியதாயிருந்த போதிலும் அவர்களில் சிலருக்கு மிருகங்களைவிடத் தடித்த தோல் இருக்கிறதாலோ என்னவோ மானம், வெட்கம், கூச்சம், ரோஷம் எதுவுமே பட்டு உறைப்பதில்லை”.
 அவர்கள் இதை 'வி ஆர் திக் ஸ்கின்ட்' என்று பெருமையாகக் கூடக் கருதலாம். ஒரு வகையில் நாமும் அதே முடிவுக்குத் தான் வரவேண்டியுள்ளது. கவி குசேலதேவர் மேலே கூறியதுபோல் மனிதர்களில் - இந்தக் கருத்தரங்கை நடத்திய மனிதர்களில் சிலருக்கு எதுவுமே உறைக்காத அளவுக்குக் கனமான தோல் இருந்திருக்க வேண்டுமென்றே இப்போது தோன்றுகிறது நமக்கு” .

(கல்கி, விடுமுறை மலர், 1986)