பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / பதினேழாவது நம்பருக்கு ஒரு பதில் ★ 711



முடியும்?” என்று ஒருநாள் முதல் டெலிவரி சுற்றுக்காகப் போன நாயுடுவிடம் கெளரி அழுதே விட்டாள்.

"அழாதீங்கம்மா! எப்படியும் நான் ரிடையராகறதுக்குள்ளார உங்களுக்கு ஒரு நல்ல பதில் கடிதாசு கொடுக்காம ரிடயராக மாட்டேன்” என்று நாயுடுவும் கெளரிக்கு நாள் தவறாமல் ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

மார்ச் மாதம் இருபதாம் தேதிக்கு இன்னும் மூன்றே மூன்று நாட்கள்தான் மீதமிருந்தன. இன்றைக்குத் தேதி பதினேழு பதினெட்டு, பத்தொன்பது, அப்புறம் இருபது. மூன்று நாட்களில் இரண்டே இரண்டு நாட்கள் மட்டும்தான் முழுமையாக இரண்டு டெலிவரிக்கும் நாயுடு கடிதங்களோடு போவார். இருபதாம் தேதியோ ஒன்பதாவது பீட்டில் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு பின்பு ஆபீஸ் வந்து அங்கேயும் எல்லோரிடமும் விடைபெற்றபின் வீட்டுக்குப் போய்விடுவார். சாயங்காலம் தபால்காரர்கள் எல்லாருமாகச் சேர்ந்து போஸ்ட்மாஸ்டர் தலைமையில் அவருக்கு ஒரு பிரிவுபசார விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். மனைவி மக்களோடு அந்த விருந்துக்கு வந்து விட்டு வீடு திரும்பினால் அப்புறம் மறுநாளிலிருந்து காக்கி உடையில் அவரைக் காண முடியாது. எல்லாரையும் போல் வெள்ளை வேஷ்டியும் முழுக்கைச் சட்டையுமாக கார்டு கவர் வாங்கத் தபாலாபீசுக்கு வந்து போக வேண்டியதைத் தவிர, அவருக்கு வேறு உத்தியோகக் கடமையோ, காரியமோ இல்லை. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகப் பொறுமையோடும், நிதானமாகவும் எல்லோருக்கும் முகம் மலரப் பதில் சொல்லிய ஒரு பழைய தலைமுறை மனிதனை அல்லது கிழவனை இருபத்தொன்றாம் தேதி காலையிலிருந்து இனி தபாலாபீசில் காண முடியாது.

நாட்கள்தான் என்ன வேகமாக ஓடுகின்றன! பதினெட்டாம் தேதியும் பதினேழாம் நம்பர் கெளரிக்குப் பதில் கடிதத்தைக் கொண்டு வராமலே ஒடிவிட்டது. இருபதாம் தேதி முதல் டெலிவரிக்கு லெட்டர்களை சார்ட் செய்து கொண்டிருந்தபோது அன்றும் பதினேழாம் நம்பர்ப் பெண்ணுக்கு ஒரு பதில் கடிதம் வராமலே போய்விடுமோ என்ற பயத்தில் நாயுடுவுக்குக் கைகள் நடுங்கின. அவள் எழுதிக் கொடுத்து அவர் வாங்கித் தபாலில் குருமூர்த்திக்குப் போட்ட கடிதங்களெல்லாம் ஒவ்வொன்றாக ‘அட்ரஸி நாட் நோன்’ என்ற சிவப்பு மை அடிப்புடன் திரும்பி வந்ததைத் தவிர பதில் கடிதம் ஒன்றுகூட இதுவரை அவளுக்கு வந்ததில்லை. வயிறும் பிள்ளையுமாகத் தவிக்கும் ஒரு சுமங்கலியை ஏமாற்றிவிட்டு ரிடையராகி நடப்பதைவிட அவள் முகத்தில் சிரிப்பைப் பார்த்துவிட்டு ரிடயராகிவிடுகிற ஆத்மதிருப்திக்கு நாயுடு ஆசைப்பட்டார்.

தெய்வம் அவருடைய ஆசையைப் பாழாக்கவில்லை. கடிதங்களை சார்ட் செய்து கொண்டே வந்தவர். பின்புறமாகக் கார்டின் அட்ரஸ் இருக்கும் அஞ்சலட்டையின் முதுகுப் பக்கத்தில் கெளரி அம்மாள் - 17, கனகம்மாள் தெரு’ என்ற விலாச எழுத்துக்களைப் படித்துவிட்டுத் துள்ளிக் குதித்துப் பரவசமானார்! ‘கடைசி